திருப்பல்லாண்டு – Thirupallandu Lyrics in Tamil

உள்ளடக்கம்

Thirupallandu Story in Tamil
திருப்பல்லாண்டு பிறந்த கதை
உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்ற திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில் ஆகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 -12 வரையுள்ள பாடல்கள், திருப்பல்லாண்டு ஆகும்.
இதை 12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், வல்லப தேப பாண்டியனின் ஐயத்தை தீர்த்து வைத்து, சமய வாதத்தில் வென்று; மன்னனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீதமர்ந்து வரும் பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் தோன்றி கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்திருஷ்டி விழுந்து விடுமோ? என்று அஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு பாடல் (Pallandu Pallandu Lyrics Tamil).
Thirupallandu Lyrics in Tamil
திருப்பல்லாண்டு பாடல் வரிகள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டுபலகோடி நூறாயிரம்மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்செவ்வடி செவ்விதிருக் காப்பு (1)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டுவடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டுவடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டுபடைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கைபாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே (3)
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்துகூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோநாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்றுபாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே (4)
அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரைஇண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்குதொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லிபண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே (5)
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கிவந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனைபந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே (6)
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதிபாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்லபையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே (8)
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டுதொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (9)
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்டஅந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலையபைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10)
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவிபல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே (11)
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்றுபல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே (12)
Thirupallandu Special in Tamil
திருப்பல்லாண்டு சிறப்பு
சாற்றுமறை என்னும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கம் & முடிவின் போதும், வைணவ கோவில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு, புறப்பாடு முடிந்து திருக்கோவில் திரும்பும் போது, இன்றளவும் கூட பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியை திருக்கோவிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர்.

No comments

Leave a Reply