Pasurappadi Ramayanam
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்
பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள சொற்றொடர்களையை தொகுத்து, ராமாயணமாக அருளிச் செய்துள்ளார். இதனைத் தினமும் பாராயணம் செய்தால், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும், ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும். இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும், மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.
Pasurappadi Ramayanam Lyrics in Tamil
பாசுரப்படி ராமாயணம்
பால காண்டம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழநலமந்தமில்லதோர் நாட்டில்அந்தமில் பேரின்பத்தடிய ரோடுஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்அயர்வறும் அமரர்கள் அதிபதியான ..5..
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன்அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்ஆவாரார் துணையென்று துளங்கும்நல்ல அமரர் துயர் தீரவல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி ..10..
மண்ணுலகத்தோ ருய்யஅயோத்தி என்னும் அணி நகரத்துவெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்க்கௌசலைதன் குல மதலையாய்த்தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் ….15..
குணம் திகழ் கொண்டலாய்மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காக்கநடந்துவந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறிவல்லரக்கர் உயிருண்டு, கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண்சிலை யிறுத்து ….20..
மைதிலியை மணம் புணர்ந்துஇருபத் தொருகால் அரசு களை கட்டமழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டுஅவன் தவத்தை முற்றும் செற்றுஅம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி ….25…
அயோத்தியா காண்டம்
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்கக்கொங்கைவன் கூனி சொற் கொண்டகொடிய கைகேயி வரம் வேண்டஅக் கடிய சொற் கேட்டுமலக்கியமா மனத்தனனாய் மன்னவனுமறாதொழியக் …30..
குலக்குமரா ! காடுறைப் போ என்று விடை கொடுப்பஇந்நிலத்தை வேண்டாதுஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்துமைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்துகலனணியாதே காமரெழில் விழலுடுத் ….35…
அங்கங்கள் மழகு மாறிமானமரு மென்னோக்கி வைதேகியின் துணையாஇளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்லக்கலையும் கரியும் பரிமாவும்திரியும் கானம் கடந்து போய்ப் ….40..
பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்துவனம் போய்ப் புக்குக் காயோடு நீடு கனியுண்டுவியன் கானம ரத்தி நீழல்கல்லணைமேல் கண்துயின்றுசித்திரகூடத் திருப்ப, தயரதன் தான் …..45..
” நின் மகன் மேல் பழிவிளைத்திட்டுஎன்னையும் நீள் வானில் போக்கஎன் பெற்றாய் கைகேசீ !நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் “என்று வானேறத் ….50…
தேனமரும் பொழில்சாரல் சித்திர கூடத்துஆனை புரவி தேரொடு காலாள்அணி கொண்ட சேனை சுமந்திரன்வசிட்டருடன் பரத நம்பி பணியத்தம்பிக்கு மரவடியை வான்பணயம் வைத்துக் குவலயத் ..55..
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்எங்கும் பரதற் கருளிவிடை கொடுத்துத்திருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய்த்தண்ட காரணியம் புகுந்து
ஆரண்ய காண்டம்
மறை முனிவர்க்கு“அஞ்சேல்மின் !” என்று விடை கொடுத்துவெங்கண் விறல் விராதனுக விற்குனிந்துவண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிப்புலர்ந்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேராவன்என்னப் பொன்னிறங் கொண்ட …65..
சுடு சினந்த சூர்ப்பனகாவைக்கொடி மூக்கும் காதி ரண்டும்கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்கஅவள் கதறித் தலையில் அங்கை வைத்து ….70..
மலையிலங்கை யோடிப்புகக்கொடுமையில் கடுவிசை அரக்கன்அலை மலை வேற் கண்ணாளை அகல்விப்பான்ஒருவாய் மானை யமைத்துச் சிற்றெயிற்றுமுற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து ..75..
இலைக் குரம்பில் தனி யிருப்பில்கனி வாய்த் திருவினைப் பிரிந்து நீள் கடல்சூழ் இலங்கையில்அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோய்வம்புலாங்கடிகாவில் சிறையாய்வைக்க ….80…
அயோத்தியர்கோன் மாயமான் மாயச் செற்றுஅலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வெய்திச்சடாயுவை வைகுந்தத்தேற்றிக்கங்குலும் பகலும் கண் துயிலின்றிக்கானகம் படி யுலாவி யுலாவிக் ….85…
கணை யொன்றினால் கவந்தனை மடித்துச் சவரி தந்த கனியுவந்து
கிஷ்கிந்தா காண்டம்
வன மருவு கவியரசன் தன்னொடு காதல்கொண்டுமரா மரமேழெய்துஉருத்தெழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஒட்டிக்கருத்துடைத் தம்பிக்குஇன்பக் கதிர் முடி அரசளித்துவானரக் கோனுடனிருந்து வைதேகி தனைத்தேடவிடுத்த திசைக் கருமம் திருத்து ..95…
திறல் விளங்கு மாருதியும்மாயோன் தூதுரைத்தல் செப்ப !
ஸூந்தர காண்டம்:
சீராரும் திறல் அநுமன் மாக்கடலைக் கடந்தேறிமும்மதிள்நீள் இலங்கை புக்குக்கடிகாவில்வாராருமுலை மடவாள் வைதேகி தனைக்கண்டு …100
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் !” அயோத்தி தன்னில் ஓர்இடவகையில் எல்லியம் போதினிதிருத்தல்மல்லிகை மாமாலை கொண்டங்கார்த்ததும்கலக்கியமா மனத்தளாய்க் கைகேயி வரம்வேண்ட …105
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழியக்‘குலக்குமரா !காடுறைப்போ ‘ என்று விடைகொடுப்பஇலக்குமணன் தன்னோடங்கேகியதும்,கங்கை தன்னில்,கூரணிந்த வேல்வலவன் குகனோடு ….110..
சீரணிந்த தோழமை கொண்டதுவும்,சித்திரகூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்சிறுகாக்கை முலைதீண்ட மூவுலகும் திரிந்தோடி“வித்தகனே ! ராமா ஓ ! நின்னபயம் ” என்னஅத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ….115…
பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாடநின்னன்பின் வழிநின்று சிலைபிடித் தெம்பிரானேகப்பின்னேயங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்அயோத்தியர் கோனுரைத்த அடையாளம்“ஈதவன்கை மோதிரமே” என்று ….120…
அடையாளம் தெரிந்துரைக்கமலர்குழலாள் சீதையும்,வில்லிறுத்தான் மோதிரம் கண்டு“அநுமான் அடையாளம் ஒக்கும்” என்றுஉச்சிமேல் வைத்துகக்கத் ….125…
திறல் விளங்கு மாருதியும்இலங்கையர்கோன் மாக்கடிகாவை யிறுத்து,காதல் மக்களும் சுற்றமும் கொன்று,கடி இலங்கை மலங்க எரித்துஅரக்கர்கோன் சினமழித்து மீண்டு, அன்பினால் ….130..
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணைபணிய
யுத்த காண்டம்
கான எண்கும் குரங்கும் முசுவும்படையாக் கொடி யோனிலங்கை புகலுற்றுஅலையார் கடற்கரை வீற்றிருந்துசெல்வ விபீடணற்கு நல்லானாய் ….135..
விரிநீ ரிலங்கை யருளிச்சரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுக எய்து,கொல்லை விலங்கு பணிசெய்யமலையாலணைகட்டி மறுகரையேறிஇலங்கை பொடி பொடியாகச் ….140..
சிலைமலி செஞ்சரங்கள் செல வுய்த்துக்கும்பனொடு நிகும்பனும்படஇந்திரசித் தழியக் கும்பகர்ணன் படஅரக்காவி மாள, அரக்கர்கூத்தர் போலக் குழமணி தூரமாட …145…
இலங்கை மன்னன் முடி யொருபதும்தோளிருபதும் போயுதிரச்சிலைவளைத்துச் சரமழை பொழிந்துகரந்துணிந்து வெற்றிகொண்ட செருக்களத்துக்கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் …150..
எண்மீர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்துமணிமுடி பணிதர அடியிணை வணங்கக்கோலத்திருமா மகளோடுசெல்வவீடணன் வானரக் கோனுடன் ….155..
இலகுமணி நெடுந்தேரேறிசீரணிந்த குகனொடுகூடிஅங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி எய்திநன்னீராடிப்பொங்கிளவாடை யரையில் சாத்தித் …..160..
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்முதலா மேதகு பல்கலனணிந்துசூட்டு நன் மாலைகளணிந்துபரதனும் தம்பி சத்துருக்கனனும்இலக்குமணனும் இரவு நண்பகலும் ஆட்செய்ய ..165..
வடிவிணை இல்லாச் சங்குதங்கு முன்கை நங்கைமலர்க்குழலாள் சீதையும் தானும்கோப்புடை சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.
— ஸ்ரீ திவ்வியப் பிரபந்தப் பாசுரப்படி ராமாயணம் முற்றும்!
Leave a Reply