Vishamakara Kannan Lyrics in Tamil

உள்ளடக்கம்

Vishamakara Kannan Lyrics in Tamil
ராகம்: செஞ்சுருட்டிதாளம்: ஏகம்இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
விஷமக்காரக் கண்ணன் பாடல் வரிகள்
விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்.பொல்லாத விஷமக்காரக் கண்ணன்.பொல்லாத விஷமக்காரக் கண்ணன்..
வேடிக்கையாய் பாட்டுப் பாடி..வித விதமாய் ஆட்டம் ஆடி..நாழிக்கொரு லீலை செய்யும்நந்த கோபால கிருஷ்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
வேடிக்கையாய் பாட்டுப் பாடி..வித விதமாய் ஆட்டம் ஆடி..நாழிக்கொரு லீலை செய்யும்,நந்த கோபால கிருஷ்ணன்..விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
நீலமேகம் போலே இருப்பான்..நீலமேகம் போலே இருப்பான்..பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்..நீலமேகம் போலே இருப்பான்..பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்..
கோலப் புல்லாங் குழலூதிகோபிகைகளை கள்ளமாடி..கோலப் புல்லாங் குழலூதிகோபிகைகளை கள்ளமாடி..கொஞ்சம் போல வெண்ணை தாடிஎன்று கேட்டு ஆட்டமாடி..விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால்நெக்குருகக் கிள்ளி விட்டு,எனக்கு அது தெரியாது என்றால்நெக்குருகக் கிள்ளி விட்டு,அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு..அவள் விக்கி விக்கி அழும்போது,இதுதான்டி முகாரி ராகம் என்பான்!விஷமக்காரக் கண்ணன்..எனக்கு அது தெரியாது என்றால்நெக்குருகக் கிள்ளி விட்டு..விக்கி விக்கி அழும்போது,இதுதான்டி முகாரி என்பான்!விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
வெண்ணை பானை மூடக்கூடாது,வெண்ணை பானை மூடக்கூடாது..இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது..இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது..சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது..!
சும்மா ஒரு பேச்சுக்கானும்திருடன் என்று சொல்லிவிட்டால்,இவனை திருடன் என்று சொல்லிவிட்டால்..உன் அம்மா, பாட்டி, அத்தை, தாத்தாஅத்தனையும் திருடனென்பான்..!விஷமக்காரக் கண்ணன்..
சும்மா ஒரு பேச்சுக்கானும்திருடன் என்று சொல்லிவிட்டால்,உன் அம்மா, பாட்டி, அத்தை, தாத்தாஅத்தனையும் திருடனென்பான்..!விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
வேடிக்கையாய் பாட்டுப் பாடி..வித விதமாய் ஆட்டம் ஆடி..நாழிக்கொரு லீலை செய்யும்நந்த கோபால கிருஷ்ணன்..விஷமக்காரக் கண்ணன்..விஷமக்காரக் கண்ணன்!
Also, read

No comments

Leave a Reply