இந்த வார ராசிபலன் 24/03/2025 முதல் 30/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 24/03/2025 முதல் 30/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதற்காக அயராது உழைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுத்தால் அதை கட்டாயம் நிறைவேற்றி விடுவீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் உயரக்கூடிய அளவுக்கு, உங்களுடைய நடவடிக்கை இருக்கும். உங்களைப் பார்த்து நாலு பேர், உங்களைப் போல வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். நிறைய பேருக்கு முன் உதாரணமாக நீங்கள் திகழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தபடி தேர்வை வெற்றிகரமாக எழுதி முடிப்பீர்கள். எதிர்கால முதலீடு லாபத்தை கொடுக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகள் உங்களுடைய வேலையில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் காகத்திற்கு பிஸ்கட் மிக்சர் போடுங்கள் நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பொறுமையோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு வேலையிலும் அவசரப்பட மாட்டீர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, இன்று செய்யக்கூடிய வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் சில பேருக்கு உண்டாகும். உடல் அலைச்சல் இருக்கும். வேலை பளுவும் அதிகமாக இருக்கும். குடும்ப சண்டைகள் தீரும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆபரண சேர்க்கைகள் இருக்கிறது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீதியில் சுற்றி தெரியும் நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவை வாங்கிக் கொடுப்பது இந்த வாரம் மேலும் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தவர்களுக்கு நல்லது மட்டும்தான் செய்வீர்கள். உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களை கூட, நீங்கள் எதிரியாக பார்க்க மாட்டீர்கள். நல்லது செய்பவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவீர்கள். நன்றி உணர்வோடு நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேண்டிய சலுகைகள் அனைத்தும் உங்களை தேடி தானாக வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பாராட்டுகள் கிடைக்கும். குலதெய்வத்திற்கு இந்த வாரம் நன்றி சொல்லுங்கள். உங்களுடைய வீட்டு குப்பையை எடுத்துச் செல்லும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. எதிரிகளை கூட சமாளித்து வென்றுவிடலாம். ஆனால் இந்த வாரம் உறவுகளோடு பிரச்சனைகள் வராமல். பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். எதிரியாக இருந்தால் கூட சண்டை போட்டு தோற்கடித்து விடலாம். ஆனால் உறவுகளை என்ன செய்வது. சண்டை போட்டால் அனுசரித்து தானே செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. வார்த்தையில் கவனம் தேவை. நிதானம் தேவை, முன்கோபத்தை முழுமையாக குறைத்துக் கொள்ளுங்கள். உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். பசு மாட்டிற்கு தினமும் உங்களால் முடிந்தால் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெருசாக எந்த ஏமாற்றமும் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்பின் தெரியாதவர்களோடு நெருங்கி பழக வேண்டாம். வீட்டிற்குள் தெரியாதவர்களை அழைத்து வர வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை குறைக்க வேண்டும். தினமும் உங்களால் முடிந்த தானத்தை செய்யுங்கள் நல்லது. ஒரு கைப்பிடி பச்சரிசி மாவை கொண்டு போய் மரத்துக்கு அடியில் தூவினாலும் நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். அடுத்தவர்களை சமாளிப்பதில் பாதி நேரம் சென்று விடும். உங்களின் மீது வீண்பழி சுமத்த நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை வீழ்த்த நாலு பேர் வீழ்த்துவதற்காகவே காத்துக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வேலை வியாபாரம் என்று சென்றால், அங்கும் எதிரிகள் வரிசை கட்டி நிற்பார்கள். இவர்களை எல்லாம் சமாளிப்பதற்குள் இந்த வாரம் போன தடமே தெரியாது. இந்த வாரம் கடகடவென ஓடிவிடும். அந்த அளவுக்கு நீங்க பிஸியா இருக்க போறீங்க. தினமும் சிவன் கோவிலில் ஐந்து நிமிடம் அமருங்கள். தானாக தைரியம் வந்துவிடும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை சீர்படும். நீண்ட நாட்களாக கொடுக்க முடியாமல் தவித்து வந்த கடனை கொடுத்து மன நிம்மதி அடைவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நகைய அடமானத்திலிருந்து மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு சேமிக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், நல்ல சம்பளத்தோடு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உடல் உபாதைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வயதான ஏழை தம்பதியருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவினர்கள் எல்லாம் ஒன்று சேருவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இரட்டிப்பு வேலை உண்டாகும். வேலையை சரிவர கவனிக்க முடியாது. அலுவலகப் பணியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். நிறைய வேலைகள் ஒன்றாக சேர்ந்து தலை மேல் விழும். வியாபாரத்தை அக்கறையோடு பார்த்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்து விளக்கு போட்டால் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் விலகும். காரியத்தடை விலகும். நினைத்த வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வை அந்த கடவுளே உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையை பொருத்தவரை மேலதிகாரிகளுடைய ஆதரவால் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் எல்லாம், இந்த வாரத்தில் சரியான புரிதலுக்குள் வருவார்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். படிக்கும் ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கி தானம் கொடுங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற மறதி உண்டாக்கும். உங்களுடைய வேலையை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். இந்த நாள் இறுதியில் டென்ஷன் கூடும். தலைவலி வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இந்த நாள் துவக்கத்திலேயே சுறுசுறுப்பாக இருந்து எல்லா வேலையையும் கடகடன்னு முடிச்சிருங்க. சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுக்காதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த வாரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவு எல்லா விஷயத்திலும் தவறாக இருக்கும். அவசரப்பட்டு எல்லா முடிவையும் எடுப்பீர்கள். அடுத்தவர்களுடைய நலனை சிறிதும் யோசிக்க மாட்டீர்கள். சுயநலத்தோடு சிந்திப்பதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள், காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அஜீரணக் கோளாறுகள் வரலாம். எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிடாதீங்க. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். மனதிற்கு பிடித்த நபரிடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுங்கள். நிச்சயம் நல்லதா ஒரு தீர்வு கிடைக்கும். வெயிலில் நடந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு செருப்பு வாங்கி தானும் கொடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் குழப்பமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வார இறுதியில் உங்களுக்கு சில பல பிரச்சனைகள் வீண் விரைய செலவுகள் வரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக சிந்திக்க வேண்டும். பிரச்சனைகளை எல்லோரிடமும் சொல்லாதீங்க. மன கவலையை குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சனைகளை எல்லோரிடமும் சொல்வதால், குழப்பம்தான் வருமே தவிர நிச்சயம் தீர்வு கிடைக்காது. எது உங்களுக்கான சரியான பாதை என்று யோசித்து தேர்ந்தெடுக்கவும். வியாபாரத்தில் யோசித்து முதலீடு செய்யவும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மன நிம்மதி கெட்டுப் போகும். ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வார இறுதியில் சரியாகிவிடும். தினம்தோறும் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். கூடவே விநாயகரை வழிபாடு செய்யுங்கள். காரிய தடைகள் விலகிவிடும். விநாயகர் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்தால் உங்களுக்கு நன்மை நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top