– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள், தேவையற்ற பகைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலை செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையாளர்களிடம் கவனத்தோடு பேச வேண்டும். யாராவது பிரச்சனைக்கு வந்தால் கூட நீங்கள் ஒதுங்கி செல்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை சார்ந்த விஷயங்கள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகளை எல்லாம் தகர்த்து முன்னேற்ற பாதையில் செல்வீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகள் பெருசாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் ஏதோ ஒரு விதமான மன பயம் வேலைகளில் கவனம் செலுத்த விடாது. இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மனதை ஒருநிலைப்படுத்த இஷ்ட தெய்வத்தின் வழிபாடை செய்யுங்கள். இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அடுத்த நாளுக்கு தேவையான வேலையை கூட முன்கூட்டியே செய்யக்கூடிய ஆர்வம் உங்களிடத்தில் இருக்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டது புரிய வரும். நல்லவர்கள் கெட்டவர்கள் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். இத்தனை நாள் தவறாக புரிந்து வைத்திருந்த விஷயங்கள் கூட இன்று சரியாக புரிய வரும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். நண்பர்கள் சிலர் எதிரியாக மாறவும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய நாளை கொஞ்சம் அனுபவப்பூர்வமாக நகர்த்திச் செல்ல தயாராக இருந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். உங்களால் ஒரு வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. குறிப்பாக மாணவர்களுக்கு சிந்தனை சிதறும். குறுக்கு வழியில் செல்வதற்கு மனதிற்கு இடம் கொடுக்காதீர்கள். நேர்வழியில் செல்லுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் அந்த பிரச்சனையை வெளிப்படையாக சொல்லுங்கள். நிச்சயம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் வேகமாக செயல்பட வேண்டும். காலை நேரத்தை ஒரு மணி நேரம் முன்பாகவே துவங்குங்கள். எந்த வேலையையும் கடைசி நிமிடம் வரை இழுத்து விடாதீர்கள். தேவையற்ற டென்ஷன் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் சுமுகமாக முடித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்களோடு விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உறவுகளோடு விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரததை விரிவு படுத்தலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் பெரியவர்களின் பேச்சை உதாசீனப்படுத்த வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். வீண் செலவை குறைப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லேசான பயம் இருக்கும். வேலையிலும் துணிச்சலாக எந்த முடிவையும் எடுக்க மாட்டீர்கள். மேனேஜரிடம் பேசுவதற்கே தயக்கம் இருக்கும். சின்ன சின்ன பின்னடைவு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கவலைப்படாதீங்க கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக் கொள்ளுங்கள். வருத்தப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் உங்களுக்கும் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் முதலீட்டில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். நீங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் மேலிடம் கையொப்பமிடும். ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் இருக்கும். செலவுக்கு ஏற்ப வருமானம் வரும். மன நிம்மதி கிடைக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam