– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஞாயிற்றுக்கிழமை தான் இருந்தாலும் சில பேருக்கு சுத்தமாக ஓய்வு கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் இருந்து பிரச்சனைகள் வரும். தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வரும். ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பீர்கள். மனதை அமைதியாக வைக்க இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை பார்த்து நிறைய பேர் பொறாமைப்படுவார்கள். கண்திருஷ்டி வைப்பார்கள். இதனால் உங்களுடைய முன்னேற்றத்தை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெள்ளை மனதோடு அடுத்தவர்களிடம் பேசாதீர்கள். நீங்கள் வெகுளித்தனமாக பேசுவது பிறகு உங்களுக்கே பிரச்சனையாக வந்து முடிந்து விடும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூரப்பயணத்தின் போது சில பல பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். மனைவி குழந்தை வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலைகளை எல்லாம் முன்கூட்டியே முடித்து வைத்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவு அன்யூன்யம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலின் முன்னேற்றத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நிறைய நல்லது நடக்கப் போகின்றது. இன்றைய நாள் உங்களுக்கான நாள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். இறை வழிபாடு செய்வது விரதம் இருப்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் உங்கள் மனது அதிகமாக ஈடுபடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும். நிறைய பேருடைய அட்வைஸ் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியாக இருக்கும் நல்லதே நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் பற்றிய பேச்சு அடிபடும். அந்த லிஸ்டில் உங்களுடைய பெயர் தான் முதல் இடத்தை பிடிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. நீண்ட நாள் பணக்கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கடன் சுமை குறையும் சொத்து பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் கையில் கொடுத்த வேலையை பொறுப்போடு முடித்துக் கொடுப்பீர்கள். விடுமுறை நாள் என்று கூட பார்க்க மாட்டீர்கள். கடமையில் கண்ணியம் கட்டுப்பாடு என்றால் அது உங்க பெயரை தான் சொல்லும். அந்த அளவுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். செலவுக்கு கையில் பணம் இருக்காது. குடும்பத்தில் சண்டை வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பெரியவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் திட்டவும் வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் கடவுள் உங்களை கைவிடமாட்டார். பிரச்சனைகளை அனுபவங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடைச் செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. பிரச்சனை செய்த எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும். ஆரோக்கியத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனுக்கு ஒரு நன்றியை சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் தெளிவான பதில் கிடைக்காது. மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். சிந்தித்துக் கொண்டே இருந்தால் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். சிந்தனையை சந்தோஷமாக மாற்றுங்கள். பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுங்கள். இறைவனின் அருள் ஆசியால் நல்லது நடக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam