இன்றைய ராசிபலன் – 01 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 01 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை உண்டாகும். வாரத் தொடக்கத்திலேயே நல்லது நடக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய முதலீட்டுக்கு கடன் கிடைக்கும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சுப காரியத்தடை விலகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று வர வாய்ப்புகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிறைவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகள் விலகும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனைவிக்கு தேவையான விஷயங்களை கேட்டு செய்யுங்கள். இல்லை என்றால் குடும்பத்தில் சிக்கல் வரும் ஜாக்கிரதை.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வாரத்தின் தொடக்க நாளாக இருந்தாலும், அலுவலக வேலை இருந்தாலும், தொழிலில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தாலும், உங்களுக்கான பிரச்சனை தனியாக எதுவும் தலை தூக்காது. நிம்மதியாக சௌகரியமாக உங்களுடைய வேலையை செய்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிகம் ஆர்வக்கோளாறு இருக்கும். எல்லா வேலைகளையும் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்னைக்கு செய்யாதீங்க. இன்னைக்கு உண்டான வேலையை முதலில் சரியாக முழுசாக முடிப்பது தான் புத்திசாலித்தனம். ஆர்வத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அக்கறை காட்டுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி இருக்கும். பணப்பிரச்சினை தீரும். நிதிநிலைமை சீராகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். மேலதிகாரிகளின் தொல்லை இருக்காது. உங்களுடைய நல்ல குணத்தை புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். மாமியார் மருமகள் உறவு பலப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். வேலையில் பிரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு இடமாற்றம் கூட ஏற்படலாம். தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். புதிய முதலீடு செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் உங்களை எதிர்த்துப் போராடியவர்களை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவீர்கள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய தருணமாக இருக்கும் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் பெரியவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதம் செய்யாதீங்க. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத மனிதர்களின் நட்பு தொழிலை விரிவுபடுத்த உதவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் வந்த இடர்பாடுகளை சமயோசித புத்தியை கொண்டு சுலபமாக சரி செய்து விடுவீர்கள். இதனால் பெரிய இழப்பு வராமல் தடுத்திருப்பீர்கள். கமிஷன் தொழில் லாபம் கொடுக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கான யோகம் சில பேருக்கு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக யாரையும் எதிர்த்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் அளவோடு பேசி பழகவும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவர்களிடம் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். அடமானத்தில் வைத்த நகை சொத்து பத்திரத்தை மீட்பதற்கு உண்டான நல்ல காலம் பிறந்து இருக்கும். மன நிறைவோடு இந்த நாள் நகர்ந்து செல்லும். பெண் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணம் கையை வந்து சேரும். தேவையற்ற சிக்கலில் இருந்து வெளி வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வையுங்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top