இன்றைய ராசிபலன் – 02 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 02 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. இறைவழிபாடு மனதிற்கு நிறைவை கொடுக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நல்லபடியாக வீட்டில் இறை வழிபாடை செய்து முடிப்பீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பகை உணர்வு இருக்கும். யாரையும் அவ்வளவு சுலபமாக எளிதில் மன்னிக்க மாட்டீர்கள். உங்களிடம் சிக்கியவர்களுடைய நிலைமை கொஞ்சம் மோசம் தான். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக நடந்து கொண்டால் பிரச்சனை கிடையாது. முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. சின்ன சின்ன மறதிகள் கூட பெரிய அளவில் பிரச்சனைகள் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மனநிறைவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். பெருசாக பிரச்சனை இருக்காது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். இதனால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. உடல் சோர்வு மனசோர்வும் ஏற்படும். முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேளையில் மட்டும் இன்று கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். பெரியவர்களை எதிர்த்து பேச வேண்டாம். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சினையும் கிடைக்காது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்த நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் படிப்பில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேனேஜரின் சப்போட்டால் நிறைய நல்ல காரியங்களை சாதிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பம்பரத்தை காலில் கட்டிக் கொண்டு வேலை செய்வீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். மேல் அதிகாரிகளோடு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். இருந்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு திறமை உங்களிடத்தில் இருக்கிறது. சமயோஜித புத்தியோடு செயல்படுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட தூர பயணத்தை கொஞ்சம் தவிர்த்துக் கொள்வது நல்லது. தவிர்க்க முடியாத பயணம் என்றால் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிகாரர்கள் இன்று நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் நட்பு, பார்ட்னர் என்று உங்களுடைய குடும்ப விஷயத்தை எல்லாம், பகிர்ந்து கொள்ளக் கூடாது. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று நம்பாதீங்க. ஏனென்றால் இன்று நம்பி ஏமாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எல்லோரிடத்திலும் உஷாராக இருக்கணும் உஷாராக பேசணும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். சவால்கள் நிறைந்த விஷயத்தை எதிர்கொள்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. வேலையில் சின்ன சின்ன பிழைகள் கூட ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை அனுசரித்துக் கொள்ளும் தன்மை இருந்தால் நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைய பக்தி இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். முன்னோர்கள் வழிபாட்டை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கடன் வாங்க கூடாது. வாழ்க்கை துணை பேச்சைக் கேட்டு நடக்கவும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top