இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் சோர்ந்து போக மாட்டீங்க. பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி வெற்றி அடைவதில் குறியாக இருப்பீர்கள். உங்களைப் பார்த்து நாலு பேர் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். வேலை தொழில் எல்லா விஷயத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் மகிழ்ச்சி மனதில் நிறைந்து நிற்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகைகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகள் நண்பர்கள் எல்லோரிடத்திலும் கவனமாக பேசவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். அவர்களோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டை போட வேண்டாம். ஜாக்கிரதையாக இருக்கவும். பகை நமக்கு நல்ல மனிதர்களின் உறவை இழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் புதுசாக சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக ஏதாவது வகுப்பில் சேர போகிறீர்கள் என்றால் இன்று சேரலாம். நல்லது நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுப்புணர்வோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். எந்த ஒரு பொருள் இழப்பும் ஏற்படாமல் இருக்க உண்டான வழிகளை தேடி கண்டுபிடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் தொடங்குவது சீட்டு போடுவது போன்ற விஷயங்களை இன்று செய்தால் லாபம் உண்டு. குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கு.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவாக எந்த வேலையும் செய்யக்கூடாது. வேலையை செய்ய ஆர்வம் இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். அரைகுறை மனதோடு கவனமில்லாமல் நீங்கள் செய்யக்கூடிய வேலை உங்களுக்கு பிரச்சனையை தந்துவிடும். இருக்கும் வேலையை இழக்கும் அளவுக்கு சோதனை வர வாய்ப்புகள் இருக்கிறது. நேர்மையாக இருங்கள். யாரிடமும் பொய் சொல்லாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவு இருக்கும். பிரச்சினைகளை கண்டு குழம்ப மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். உங்களை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை வேண்டும் என்றாலும் இன்று ஒப்படைக்கலாம். எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி, அந்த பொறுப்புகளை முடிக்காமல் வீடு திரும்ப மாட்டீர்கள். உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை பெற்று தரும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். புதிய தொழில் தொடங்குவது புதிய முதலீடு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும். வேலை செய்யும் இடத்தில், உங்களுடைய முன்னேற்றத்தை தடை படுத்த நாலு பேர் இருப்பாங்க. அவர்கள் உங்கள் கூடவே இருப்பார்கள். ஆனால் பின்னால் உங்களுக்கு குழி பறிப்பாங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. எதுவாக இருந்தாலும் நாலு நல்லவர்களின் ஆலோசனையோடு செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் நிம்மதி இருக்கும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். சண்டை போட்டு இருந்த மனைவி உங்கள் சொல்பேச்சு கேட்டு நடப்பாங்க. பிரிந்த கணவன் மனைவி உறவுகளும் ஒன்று சேரும். முடிந்தால் இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செல்லுத்துங்கள். பயணத்தின் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சுகமான நாளாக இருக்கும். காதல் வெளிப்படும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். காதல் பேச்சு வார்த்தை, கல்யாண பேச்சு வார்த்தையாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் கெட்டி மேல சத்தம் நிச்சயம் கேட்கும். அதற்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடக்கும். மற்றபடி வேலை தொழில் இவைகளில் கவனம் செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. சந்தோஷத்தில் வேலையில் அக்கறை காட்டாமல் இருக்கக் கூடாது ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை மறந்து போவீங்க. ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் உங்களுடைய உடைமைகளை எல்லாம் சரியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அலுவலகம் செல்பவர்கள் முக்கியமான ஃபைல் பேப்பர்ஸ் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அம்மா அப்பா உங்கள் முயற்சிகளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமையான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட மாட்டீங்க. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மனது சந்தோஷம் அடையும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. முன்கோபத்தை குறைத்தால் மேலும் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மாத தொடக்கத்திலேயே சம்பளம் வாங்கினவர்களுக்கு ஜாலி. கொஞ்சம் தேதி தள்ளி சம்பளம் வருபவர்களுடைய பாக்கெட் காலி. இதுதான் நிதர்சனமான உண்மை. செலவை குறைக்கணும் சேமிப்பை அதிகப்படுத்தனும். அப்போதுதான் சம்பளம் வரும் வரை குடும்பத்தை சமாளிக்க முடியும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில் சிக்கல்கள் வராமல். பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் இருக்கிறது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top