இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ரொம்பவும் கஷ்டமான சூழ்நிலையில் சிக்கி இருந்தால், உங்களை காப்பாற்ற நிச்சயம், உங்களுடைய நண்பர்கள் உதவி செய்வார்கள். பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நண்பர்களிடமோ உறவுகளிடமும் உதவி கேளுங்கள். நிச்சயம் உதவி கிடைக்கும். பிரச்சனைகளை போட்டு ஒட்டுமொத்தமாக மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம். நல்ல வேலை, நல்ல தொழில் அமையவில்லையா, தெரிந்த நாலு பேரிடம் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு இன்று நல்லது நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு நல்லதை செய்யும். பெரிய மனிதர்களின் சந்திப்பு தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான ஐடியாக்களை கொடுக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவிக்குள் வீட்டில் வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. உறவுகளோடு விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை கிடையாது.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு தேவையற்ற பகை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள்  உறவுகளிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதன் மூலம் பகை வரலாம், அல்லது ஏதாவது ஒரு விஷயத்திற்கு நியாயத்தை பேச போய் பகையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று காலமும் நேரமும் உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆகவே உறவுகளோடு பேசாமல் இருப்பதே நல்லது. வீடு தேடி வருவாங்களே என்ன செய்வது. அவர்களிடம் தலையை மட்டும் ஆக்கிக் கொள்ளுங்கள். மௌனம் மட்டும் பதிலாக இருக்கட்டும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிக ஆர்வம் இருக்கும். எல்லா வேலையையும் சீக்கிரமாக கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அபரிவிதமான வளர்ச்சியை அடைவீர்கள். அதிக லாபத்தை பெறுவீர்கள். நீண்ட நாள் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும். உங்களுக்கு பாராட்டும் கிடைக்கும். பொறுப்புகளை சரியான நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன இடர்பாடுகள் விலகும். உங்களுடைய உடைமைகளை மட்டும் கொஞ்சம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சின்ன வேலை செய்தால் கூட அதை நாலு பேர் பாராட்டுவார்கள். இது கொஞ்சம் மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டில் கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். இந்த வேலையை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருப்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு வேலையை செய்வதுதான் நல்லது. அரைகுறை மனதோடு எதுவும் செய்யாதீங்க. முடிந்தால் எல்லா வேலையையும் எடுத்து ஓரம் கட்டி விட்டு ஓய்வு எடுங்கள். நிம்மதியாக தூங்கி எழுந்தாலே மனது தெளிவு பெறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எந்தவித ஆர்ப்பாட்டமும் இருக்காது. இன்றைய நாள் அமைதியாக செல்லும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடன் வேலை செய்பவர்கள் உங்களைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வார்கள். தொழிலில் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க. எந்த விஷயமாக இருந்தாலும் அலசி ஆராய்ந்து பிறகு அந்த விஷயத்தில் காலை வைப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் வேலையை செய்ய மாட்டீங்க. நல்ல பெயர் கிடைக்கும். முயற்சியே செய்ய மாட்டீங்க உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இப்படி நிறைய நல்ல விஷயங்களை கடவுள் தானாக உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் என்ஜாய் பண்ணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு நல்லது நடந்திருக்கும். ஆனால் அதை பார்த்து நிச்சயம் நான்கு பேர் பொறாமைப்படுவார்கள். அதனால் சில சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நல்லதை நாலு பேரிடம் அனாவசியமாக தம்பட்டம் அடிக்காதீங்க. அது உங்களுக்கு கண் திருஷ்டியை கொடுத்து விடும் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பேச்சில் கவனம் இருக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது, மேலதிகாரிகளிடம் பேசும்போது, நண்பர்களிடம் பேசும் போதும் வார்த்தைகளை அனாவசியமாக வெளியிடக்கூடாது. பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. குறிப்பாக இளைஞர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top