இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இருந்தாலும் உங்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய குணம் இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை ஒரு ஓரம் வைத்துவிட்டு, பொதுப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மனது நிம்மதி அடையும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் அளவோடு பேசி பழகுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதியோடு இருப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். எதிர்மறையான எண்ணங்கள் விளக்கும். வீட்டில் சந்தோஷம் பிறக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாரிடம் பேசினாலும் கவனத்தோடு இருக்கவும். கணவன் மனைவி கடையே அன்பு அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும்.
கடகம்
கடக ராசி காரர்கள் இன்று முன்னோர்கள் வழிபாட்டில் மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனை குடும்பத்தில் ஒரு முடிவுக்கு வரும் சந்தோஷம் பெருகும் ஆலயங்களுக்கு சென்று இறை வழிபாடு செய்வது நல்லது வேலையில் கவனம் தேவை. நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்க கூடாது. தொழிலில் கூடுதல் அக்கறை இருந்தால் நல்ல லாபத்தை எடுக்கலாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக ரீதியாக சுப செலவுகளை செய்வீர்கள். அன்னதானம் செய்வது ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது போன்ற, விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இதனால் மன நிம்மதி அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. அதையெல்லாம் சரி செய்ய கொஞ்சம் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் பிரச்சனையால் பெரிய பாதிப்பு எதுவும் வராது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் நட்புறவு பழகுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பில் கவனம் கொள்வது அவசியம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய நண்பர்களின் சந்திப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய முதலீட்டுக்கான கடன் கிடைக்கும். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சோர்ந்து போகக்கூடாது. மனதை திடமாக வைத்துக் கொண்டால் ஜெயிக்கலாம். வேலையில் அனுசரணை தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். எதிரிகளை சம்பாதித்துக் கொண்டால் நஷ்டம் உங்களுக்கு தான் செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சூழ்நிலை நிலவும். யார் என்ன செய்தாலும் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இருந்தாலும் பிரச்சனைகள் தேடி வரச் செய்யும். எதிரிகளால் தொல்லை இருக்கும். கடவுள் மீது பாரத்தை போட்டு உங்களுடைய வேலையை செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். எந்த வேலையிலும் யாரை காரணம் சொல்லியும் பின் வாங்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனை குறையும். தேவை இல்லாத வம்பு தும்புகளுக்கு போகாதீர்கள். இன்று மாலை இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவரை யாரேனும் ஒருவருக்காவது என்று அன்னதானம் செய்வது நல்லது. முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தர இது நிச்சயம் உதவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அசதி நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளோடு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக வாக்குவாதம் செய்யாதீர்கள். கவன குறைவு வேண்டாம். எதுவாக இருந்தாலும் முழு மனதோடு செய்யவும். அரைகுறை மனதோடு செய்யக்கூடிய காரியங்கள் நல்ல பலனை கொடுக்காது. மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். வேலையில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை நிலவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top