– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி இருக்கக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதில் போராடி வெற்றி காண்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகளில் உங்கள் பக்கம் தீர்ப்பு வரும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் கூட இன்று ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி இருக்கும் இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சந்தோஷமான நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் அன்னியூன்யம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாள். வேலை தொழிலில் எல்லாம் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. அனுசரணை இருந்தால் இந்த நாளை சுலபமாக கடந்து செல்லலாம். வேலையில் எதிரி தொல்லை இருக்கும். மேலதிகாரிகளின் பிரஷர் இருக்கும். இருந்தாலும் நீங்கள் சாந்தமாக தான் நடந்து கொள்ள வேண்டும். யாராவது உங்களை திட்டினால் பதிலுக்கு நீங்கள் திட்டக்கூடாது. ஒரு கன்னத்தில் அறைந்தாலும் மறு கன்னத்தை காட்டுங்கள் வேறு வழி இல்லை.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கோடான கோடி நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மன நிம்மதி ஏற்படும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்திற்கு முடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். நிதிநிலைமை சீராகும். எண்ணிய காரியங்கள் எல்லாம் ஈடேறும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இனிய நாளாக அமையப் போகின்றது. நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வாக்கு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு இடம் மாற்றமும் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையக் கூடிய நாளாக இருக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். சவால் விட்ட விஷயங்களில் எல்லாம் ஜெயித்து காட்டுவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். வீட்டில் கணவன் மனைவி உறவு பலப்படும். மாமியார் மருமகள் சண்டை ஒரு முடிவுக்கு வரும். உறவுகளோடு ஒரு நல்லிணக்கம் ஏற்படும். இரவு நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்த நாள் துவக்கம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இந்த நாள் முடிவில் உங்களுடைய வேலைகளை எல்லாம் சரியாக முடித்து விடுவீர்கள். சில பல இடர்பாடுகள் வரத்தான் செய்யும். முயற்சிகளில் சின்ன சின்ன தோல்வி இருக்கும். இருந்தாலும் இறை வழிபாட்டை செய்துவிட்டு உங்கள் வேலையை செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையில் புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும்போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் இன்று அனாவசியமாக நம்பாதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைகூடி வரும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்தி இருக்கிறது. குழந்தை பாக்கியம் இன்றி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். புதிய முயற்சிகள் செய்தால் யாராவது வந்து குறை சொல்வார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உடல் சோர்வு இருக்கும். விருந்தாளிகளின் வருகையால் வேலை அதிகரிக்கும். ஏதாவது ஒரு முட்டுக்கட்டை உங்கள் மனதை இன்று காயப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை கவலைப்படாதீங்க இறைவனை நம்புங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெற்றி காண்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்திற்கு தேவையான முதலீட்டுக்கு முயற்சி செய்யலாம். புதிய பாட்னரை சேர்த்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பம் இருக்கும். எடுத்த முடிவு சரியா தவறா என்று யோசிப்பீர்கள். தேவையற்ற எண்ணங்கள் வந்து குழப்பிவிடும். அடுத்தவர்களுடைய பேச்சு மனக்குழப்பத்தை கொடுக்கும். எதையுமே காதில் வாங்க வேண்டாம். இறைவன் மீது பாரத்தை போடுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு நல்லதை மட்டும் தான் செய்யும் என்று நம்பி இந்த நாளை நகர்த்திச் செல்லுங்கள் நல்லதே நடக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam