இன்றைய ராசிபலன் – 04 பிப்ரவரி 2025

இன்றைய ராசிபலன் – 04 பிப்ரவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது தானாகவே நடக்கும். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும், உங்களை தேடி மரியாதை வரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கிறது. சில பேருக்கு அவரவர் துறைகளில் சிறந்த பட்டம் பதவிகள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கு. அவார்டுக்கு உங்களுடைய பெயர் செலக்ட் ஆகலாம் சந்தோஷம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சமயோசித புத்தி சிறப்பாக வேலை செய்யும். சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், அதிலிருந்து சுலபமாக வெளி வருவீர்கள். உங்களை பார்த்து அடுத்தவர்கள் வியப்பார்கள். பெரிய அளவில் வரக்கூடிய சிக்கலுக்கு கூட சுலபமாக ஒரு தீர்வை போன போக்கில் சொல்லுவீர்கள். கடவுளே உங்களுக்குள் வந்து புகுந்து கொண்டதாக ஒரு உணர்வு ஏற்படும். ஏதோ ஒரு அதிசயம் நிச்சயம் நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளுடைய தொல்லை இருக்கும். நம்முடைய வேலையை செய்யவிடாமல் தடுக்க நாலு பேர் கூடவே இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி இந்த நாளில் நல்லது நடக்க வேண்டும் என்றால் அது அந்த இறைவன் கையில் தான் உள்ளது. அனுசரித்து செல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். வேண்டாம் என்று உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் கூட, தானாக வந்து உங்களோடு ஒட்டிக் கொள்வார்கள். காரணம் உங்களுடைய முன்னேற்றம்தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்முடைய திறமையை நாம் வளர்த்துக் கொண்டால், எல்லாம் நம்மை தேடி வரும். இதை இன்று நீங்கள் நன்றாக உணரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த ஒரு வேலையிலும் பின்னடைவு இருக்கக் கூடாது. நேரத்திற்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வாக்கு கொடுக்கக் கூடாது. கெட்ட பெயர்கள் அவமானங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். பெரியவர்களிடம் உஷாராக நடந்து கொள்ள வேண்டும். வீட்டு விஷயங்களை வெளி மனிதர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் லாபமாக மாறும். வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஏதாவது சின்ன சின்ன காயங்கள் படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். நஷ்டத்தையும் லாபமாக மாற்றக்கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று பெருசாக கல்லா கட்டலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு அடுத்தவர்களுடைய உதவியை நாடுவீர்கள். அடுத்தவர்களை குறை சொல்வீர்கள். போகாத ஊருக்கு வழி தேடுவீர்கள். இந்த நாள் வேலைகள் முடிவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். பார்த்துக்கோங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். எதிரிகளாக இருந்தாலும் மனம் இரங்கி போய் உதவி செய்வீர்கள். எவ்வளவு கடும் கோபக்காரர்களாக இருந்தாலும் இன்று கொஞ்சம் கூட கோபம் வராது. அமைதியின் சொரூபமாக இருப்பீர்கள். எதையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு அட்வைஸ் வேற செய்வீங்க. இன்று ஏதோ ஒரு அமைதி தென்றல் உங்கள் மனதில் வீசத்தான் போகிறது பாருங்களேன். சுகமான அனுபவமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி இருக்கும். நேற்று செய்த தவறுக்கு இன்று வருத்தப்படுவீர்கள். என்ன செய்வது கோபத்தை குறைக்க வேண்டும். வார்த்தையில் நிதானம் இருக்க வேண்டும். சுயநலம் இருக்கக் கூடாது. எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று பேசக்கூடாது. இதையெல்லாம் குறைத்துக் கொண்டால் இந்த நாள் இனிய நாளாக செல்லும் பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பெரிய பெரிய மீட்டிங்கில் கலந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இன்று உண்டாகும். எதிராளிக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேனேஜருடைய தொல்லை கொஞ்சம் இருக்கும். வேலையில் கொஞ்சம் டென்ஷன் அவ்வபோது வந்து போகும். வியாபாரிகளுக்கு நல்ல சூழலை அமையும். நல்ல லாபம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய கடமைகளை முடித்து விடுங்கள் நல்லது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top