
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட நாள் கடன் சுமை தீர வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தெரிந்தவர்கள் சிபாரிசின் மூலம் உங்களுக்கு இன்று நல்லது நடக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை நன்மை செய்யும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். செய்யும் வேலையில் மனதிருப்தி இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளவும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. அதிக நேரம் கைபேசி பார்க்க வேண்டாம். சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டாம்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பணிவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து கொள்வீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உங்களுடைய வேலையை கெடுத்து விடும். தேவையற்ற விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ளக் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கணவன் மனைவி அனுசரணை தேவை.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை செய்யும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுவாடிக்கையாளர்களின் வருகை பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். சின்ன சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அசதி நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்காது. விருந்தினர்களின் வருகை சுப செலவையும், சந்தோஷத்தையும் சேர்த்துக் கொடுக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக புதிய முடிவுகளை எடுக்க வேண்டும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருப்பீர்கள். உங்களை மீறி எந்த ஒரு தவறும் வேலையிலும் நடக்காது, வியாபாரத்தையும் நடக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மேலும் நன்மைகளை பெறலாம். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட நாள் நிறைவேற்ற முடியாத நேர்த்தி கடனை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளும் கைக்கூடி வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புண்ணிய காரியங்களை மேற்கொள்வீர்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும். அவசர அவசரமாக யோசித்து அவசர அவசரமாக சிந்தித்து செயல்படுவீர்கள். இதனால் பெரிசாக பின் பிரச்சனைகள் வரவில்லை என்றாலும் சின்ன சின்ன ஏமாற்றங்களும் சின்ன சின்ன இழப்புகளும் ஏற்படும். பெரிய அளவில் அனுபவங்கள் கிடைக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, பொது பணிகளில் உங்களை, நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வேலையை பொறுத்த வரை நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான சூழ்நிலையே நிலவும். கவலைப்பட வேண்டாம். பிரச்சனைகளை சரியாக, இறையருள் உங்களுக்கு இருக்கு.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த சம்பவங்கள் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பிக்கள் படங்கள் இருக்கும். விடுமுறை நாளை இடையூறு செய்யும் அளவு தொலைபேசி தொல்லை செய்யும். பார்த்துக்கோங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam