இன்றைய ராசிபலன் – 06 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 06 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை நிறைந்த நாளாக இருக்கும். எதையோ இழந்தது போல சோகமாகவே இருப்பீர்கள். வேலையில் அதிக கவனம் காட்ட மாட்டீர்கள். தொழிலில் சின்ன சின்ன பின்னடைவுகள் வரலாம். சோம்பேறித்தனத்தோடு கவலையோடு இருப்பதால், எந்த ஒரு வேலையும் முழுமையாக நிறைவு பெறாது. அரைகுறை மனதோடு இருக்கும் இந்த நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு உங்களுடைய வாழ்க்கையை நல்ல முன்னேற்றத்திற்கு நகர்த்திச் செல்லும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை மன நிறைவை கொடுக்கும். சுப செலவை ஏற்படுத்தும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். எல்லா வேலைகளிலும் தாமதம் ஏற்படும். அலுவலகம் செல்பவர்கள் பள்ளிக்கூடம் செல்பவர்கள், எல்லாம் கொஞ்சம் சீக்கிரமாக வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். இல்லை என்றால் மேல் அதிகாரிகளிடமும், ஆசிரியரிடமும் திட்டு வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள். முன் கோபத்தை குறைக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரைவதால் கொஞ்சம் மூட் அவுட் ஆகுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடை செய்வதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரியவர்கள் பேச்சை எதிர்த்து பேச வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை எதிரியாக பார்த்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் அயராது உழைத்து நிறைய லாபத்தை பெறுவீர்கள். நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழக்கூடிய நம்பிக்கை உடைய மனிதர்களாக மாறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும் குடும்பத்தில் இருந்து வந்த விரிசல் சரியாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடம்பை ஆரோக்கியத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகமாக பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகினாலும் தவறு கிடையாது. குழந்தைகளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாள். வெற்றி வாகை சுடக்கூடிய நாள். நிம்மதி கிடைக்கக்கூடிய நாள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்திற்கு வருவீர்கள். எதிரிகளை கூட மன்னிக்கும் அளவுக்கு உங்களுடைய மனது சாந்தமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக இருக்கவும். கடினமான வார்த்தைகளை கொண்டு பேசாதீங்க. கோர்ட் கேஸ் வழக்குகளால் கொஞ்சம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். வேலை தொழில் இவைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். எதிரிகளை எல்லாம் அடக்கும் அளவுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தோல்வி என்ற வார்த்தையை காதில் கேட்கக் கூடாது என்பதற்காக அயராது உழைப்பீர்கள். அதற்கான வெற்றியும் காண்பீர்கள். இடமாற்றம் சில பேருக்கு சங்கடத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் சிக்கல் வர வாய்ப்புகள் இருக்குது ஜாக்கிரதை. சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவு பண்டங்களை சாப்பிடாதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இறை வழிபாடு செய்யவும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது. டிஸ்கவுண்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வாங்க வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். முன்பின் தெரியாத நபரை நம்பி காசு கொடுக்க வேண்டாம். தெரிந்தவர்கள் கடன் கேட்டாலும் காசு கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வேலையில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் பாராட்டும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் இருக்காது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வெற்றி அடைவீர்கள். வேலையில் இருந்த சிக்கல்களில் இருந்து விடுபட முயற்சி செய்வீர்கள். இருந்தாலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரத்தான் செய்யும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால் மனது சந்தோஷம் அடையும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top