இன்றைய ராசிபலன் – 06 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 06 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது. இருந்தாலும் மனது உடைந்து போகக்கூடாது. முயற்சிகளை கைவிடக்கூடாது. குடும்பத்தில் மனைவியை அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். வேலை தேடி திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். வங்கியில் சேமிப்பு உயரும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனது ஈடுபடும். அக்கம் பக்கம் வீட்டு உறவுகளோடு நல்லிணக்கம் உண்டாகும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொலைதூரப் பயணம் நன்மையை கொடுக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கை ரகசியங்களை அனாவசியமாக அடுத்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் பம்பரமாக சுழன்று செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணாக செலவழிக்க மாட்டீர்கள். இன்றைய நான் உங்களுக்கு இனிய நாளாக அமையும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உறவினர்களோடு கவனமாக பேச வேண்டும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். மேலதிகாரிகளாக இருப்பவர்களுக்கு பிரஷர் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்வதில் சில சிரமங்கள் உண்டாகும். எவ்வளவுதான் வேலை இருந்தாலும், ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். டென்ஷன் குறைய வேண்டும் மனதிற்குப் பிடித்த விஷயங்களில் கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்கள் பஞ்சாயத்தில் நீங்கள் தலையிடாதீங்க. தேவையில்லாத பிரச்சனைகளை நீங்களே கொண்டு வருவதற்கான வாய்ப்பு அது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். புது மனிதர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஜாக்கிரதையாக இருங்கள் பணம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். எப்போதுமே அடுத்தவர்களை மதிக்காமல் தலைகுனியாமல் நடந்து கொள்ளும் நீங்கள், இன்று பெரியவர்களுக்கும் மதிப்பு கொடுத்து, உயர் அதிகாரிகளை மதித்து பணிவோடு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான பக்குவத்தை பெறுவீர்கள். தலைகனம் குறையும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நலமான நாளாக இருக்கும். எல்லா வேலையும் அந்தந்த நேரத்தில் சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வாக்கு தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உற்சாகம் நிறைந்த இந்த நாளை நல்வழிப்படுத்தியதற்கு, இந்த நாள் இறுதியில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிதி நிலைமை சீராகும். வருமான தடை விலகும். தொழிலை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். நற்செய்தி தொலைபேசி எண் மூலம் வந்து சேரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மன கவலைகள் இருக்கும். எவ்வளவுதான் வேலை செய்தாலும், அதில் ஒரு மனதிருப்தி இருக்காது. சில பேருக்கு சோம்பேறித்தனத்தால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. அன்றாட வேலையை அன்றாடம் முடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் எல்லா விஷயத்திலும் அடுத்தவர்கள் கையை எதிர்பார்க்கக் கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவீர்கள். குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி செல்வீர்கள். சீக்கிரம் தாய்நாடு திரும்பவும் வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்திற்கு குறைவே இருக்காது. அடுத்த நாள் வரப்போகும் விநாயகர் சதுர்த்திக்கு இன்று உங்களுடைய வேலையை தொடங்கி விடுவீர்கள். வீட்டில் சந்தோஷம் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவையற்ற மன சஞ்சலம் நீங்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top