இன்றைய ராசிபலன் – 07 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 07 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையை இழக்கக்கூடாது. புத்திசாலித்தனத்தை விட்டு விடக்கூடாது. வேகத்தோடு செயல்படுவதை விட, இன்று நீங்கள் விவேகத்தோடு செயல்பட்டால் வெற்றி காணலாம். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மாலை குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பண்டிகை நாள் என்பதால் இன்று குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். விநாயகரது வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். பெருசாக பிரச்சனை இருக்காது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்தையும் கூடுதல் முயற்சிகள் போட வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு, கண்மூடித்தனமாக இருந்தாலும் உங்களை வீழ்த்திவிட்டு, உங்களிடத்தை பிடிக்க பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சி வச படாதீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சில பேருக்கு நிதி நிலைமை மோசமாக இருக்கும். கைமாத்தாக பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையும் அதிகமாக இருக்கும். ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்த வேலையை முதல் செய்வது, எந்த வேலையை பிறகு செய்வது என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இல்லை என்றால் குழப்பத்தில் டென்ஷன் அதிகமாகிவிடும். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. எதிர்பாராத பண வரவு மன அமைதியை கொடுக்கும். கடன் பிரச்சனையை தீர்க்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தடை கற்கள் இருக்கும். அதை நீங்கள் தான் படி கற்களாக மாற்ற வேண்டும். விநாயகரது வழிபாட்டை மன நிறைவோடு செய்யுங்கள். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். ஆடம்பர செலவும் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் மனநிறைவு எல்லாம் கிடைக்கும். இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். தொழிலை விரும்பப்படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது தொழில் தொடங்க இன்று நல்ல நாள். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியையும் கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அதை இன்னொருவர் தானாக வந்து ஷேர் எடுத்துக் கொள்வார்கள். நண்பர்களின் உதவி, உறவினர்களின் அருமை பெருமைகள் என்ன என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் காட்டவும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சொந்த ஊர் சென்றவர்களுக்கு மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. விநாயகர் வழிபாடு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் வரும் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக சரி செய்து விடுவீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரம் கொஞ்சம் மந்தமாக சென்றாலும், மாலை விநாயகர் வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாலை உங்களுக்கு நல்ல நேரம் தான். காலையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். சோம்பேறித்தனப்பட்டு வேலையை செய்யாமல் விடக்கூடாது. என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்தால் இன்று தப்பித்துக் கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கு உண்டான வாய்ப்புகள் வீட்டு வாசல் கதவை தட்டும். சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி காணலாம். தொழிலில் புது மனிதர்களின் சந்திப்பு மன நிறைவை கொடுக்கும். புது ஐடியாக்களையும் கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். வேலை அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். இன்று மாலை குடும்பத்துடன் இறை வழிபாடு செய்து, விநாயகரின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரும். யாராவது ஒருவர் மட்டும் விட்டுக் கொடுக்கவும். அப்போதுதான் குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போகாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷத்தை நிறைவாக பெற வேண்டும் என்றால், விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அடம் பிடித்துக் கொண்டு நிற்கக்கூடாது. மற்றபடி வேலை தொழில் எல்லாம் சுமூகமான போக்கே நிலவும். இன்று மாலை குடும்பத்துடன் சேர்ந்து விநாயகர் வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்லதே நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top