இன்றைய ராசிபலன் – 08 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 08 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளை சரி செய்ய நண்பர்கள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நட்பின் முக்கியத்துவத்தை இன்று நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். ஆனால் அதை எல்லாம் சமாளிப்பதற்கு உண்டான பக்குவம் உங்களிடத்தில் வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புதிய அனுபவத்தை கொடுக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். சில பேர் பொதுப் பணிகளில் ஈடுபடுவார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சில பேருக்கு இடம் மாற்றம், பதவி உயர்வோடு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும். வேலையை சரியாக செய்ய முடியாது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். இன்று மாலை இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். வேலையில் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. சுமூகமாகத்தான் செல்லும். தொழிலில் கணக்கு வழக்கில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்யும் போது அக்கறையாக இருங்கள். மூன்றாவது நபரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த விரிசல் சரியாகும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தகாத நட்புகளை தவிர்க்கவும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் உங்களுடைய வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். பெற்றவர்கள், பிள்ளைகளுடைய படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் கோபப்பட மாட்டீர்கள். வேலை தொழில் எல்லா இடத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் பொறுமையாக எதிர்கொண்டு சரி செய்வது கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். பெரியவர்களை எதிர்த்து பேச வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். நாலு பேர் முன்பாக தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். சொத்து சுகம் சேர்க்கை இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நற்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த வேலைகளை இன்று கையில் எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அடம்பிடித்து நீங்களாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலும் அதில் உங்களுடைய ஆதங்கத்தை கோபத்துடன் முழுமையாக வெளிப்படுத்துவதன் மூலம் புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கூட, உங்களுக்கு சாதகமாக பேசமாட்டார்கள். இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றபடி சாதகமாக இருக்காது. கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வரலாம். டார்கெட்டை முடிக்காத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு பிரஷர் வரத்தான் செய்யும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும். அதுதான் புத்திசாலித்தனம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top