இன்றைய ராசிபலன் – 09 மே 2025

இன்றைய ராசிபலன் – 09 மே 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கும். குழந்தைகளுடன் நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்ற பாதைக்கான வழி கிடைக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு நடக்க வேண்டும். முக்கியமான வேலைகளை 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிக்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் கடைசி நிமிடம் வரை எடுத்துச் செல்ல வேண்டாம். சோம்பேறித்தனத்திற்கு விடுதலை கொடுங்கள். சுறுசுறுப்புக்கு இடம் கொடுங்கள். நிச்சயம் இன்று நல்லதே நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் ஒத்துழைக்க மாட்டார்கள். வேலை செய்யும் இடம் வியாபாரம் எல்லாவற்றிலும் சில பல தடைகள், தடங்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவலைப்படக்கூடாது. எல்லாரையும் அனுசரித்து, எல்லோருடைய கருத்தையும் கேட்டு நடப்பது நல்லது. பொறுமையை கைவிட வேண்டாம்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்ய நேரம் கிடைக்கும். உறவுகள் மத்தியில் நல்ல பெயரும் கிடைக்கும். ஆனால் பேசும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்து கொண்டால், இன்று பிரச்சனைகளும் குறையும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் உங்களை குறை சொன்னாலும், உங்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் கோபப்படக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் அனுசரணை தேவை. பொறுத்தார் பூமி ஆள்வார். இதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரிவர நடக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உற்சாகத்திற்கு எந்த குறைபாடும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு முடிவை எடுப்பதற்கு பலமுறை யோசனை செய்தும், தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது. குழப்ப நிலையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அகல கால் வைக்க வேண்டாம். அதிக பணத்தை செலவு செய்து எந்த பொருளும் வாங்க வேண்டாம்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் சந்தோஷமும் அளவுக்கு மீறி கிடைக்கப் போகிறது. மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். காதல் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையே இல்லாதவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். அதுவும் உங்கள் மனதிற்கு பிடித்தபடி எல்லாமே நடப்பதால் இறைவனுக்கு இன்று நன்றி சொல்ல மறக்காதீங்க.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் நீங்கள் கையில் எடுத்தால் அது வெற்றி கரமாக முடியும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்., நகை அடமானத்தில் இருந்தால் அதை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். கடன் சுமை குறையும் மன நிம்மதி கிடைக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று உங்களுடைய வாழ்க்கை ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று உங்களுடைய மனநிலை இன்று பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கும்‌. சில சமயம் நாம் எடுக்கும் தாறுமாறான முடிவுகள் கூட நமக்கு நல்லதை செய்யும். அது போல தான். இன்று உங்களுக்கு. நீங்கள் என்ன செய்தாலும் அதன் மூலம் கடவுள் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கப் போகின்றான். என்ஜாய் பண்ணுங்க.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக யாரிடமும் சண்டைக்குப் போய் நிற்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். புது நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கப் போகிறது. வேலையில் செய்து வந்த தவறை திருத்திக் கொள்வீர்கள். உங்களுடைய தகுதியை நிரூபிப்பதற்கு அயராது உழைப்பீர்கள். வெற்றியும் காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top