இன்றைய ராசிபலன் – 10 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்கலாம். புதுசாக வேலை தேடலாம். இப்படி உங்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை இன்று ஆரம்பியுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதும் இன்று நற்பலன்களை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலிலும் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக உங்களுடைய வேலைகளை செய்ய வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது. கூடுமானவரை பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழிலில் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீர்கள். நண்பர்கள் சொன்னார்கள், தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று, எதையும் முழுசாக தெரிந்து கொள்ளாமல் அந்த வேலையில் காலை வைக்கக்கூடாது. ரொம்பவும் கவனமாக இருக்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத உதவி கிடைக்கும். நீங்கள் சிக்கலில் சிக்கிக்கொண்டாலும் உங்களை காப்பாற்ற நிச்சயம் நான்கு பேர் கை கொடுப்பாங்க. நண்பர்களுடைய அருமை பெருமைகளையும், உறவினர்களுடைய அருமை பெருமைகளையும், இன்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். தொழிலில் நல்லது நடக்கும். முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நல்ல செயல்களை செய்யக்கூடிய நாளாக இருக்கும். சுபமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தானதர்மம் பூஜை புனஸ்காரங்களில் உங்களுடைய மனசு ஈடுபடும். மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அவர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்களுடைய திறமை என்ன என்பதை வெளி காட்டினாலே போதும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீண்ட நாட்களாக பிரிந்த ஒரு உறவை சந்திப்பதன் மூலம் உங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவீர்கள். நீண்ட நாள் இழுபடியாக இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் பகை விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. உறவினர்களோடு சேர்ந்து இன்பமாக இந்த நாளை கடந்த செல்வீர்கள். விடுமுறை நாட்களை சந்தோஷமாக செலவு செய்ய ஏதாவது ஒரு பிளான் பண்ணுவீங்க. அது சக்சஸும் ஆகும். அதாவது நீண்ட தூர பயணம் செல்வது, சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களை இன்னைக்கு பிளான் பண்ணுங்க நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன திருப்தியை கொடுக்கும். கடன் பிரச்சனையில் இருந்து உங்களை விடுவிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை பிரச்சனைகள் இருக்காது. வியாபாரத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிரிகளை வீழ்த்தி வெல்ல முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். சண்டை போடுவதிலேயே பாதி நேரம் சென்று விடும். கூடுமானவரை அமைதியாக இருக்க பாருங்கள். யாரிடமும் பிரச்சனைக்கு போக வேண்டாம். பிரச்சனை உங்களைத் தேடி வந்தாலும் நீங்கள் ஒதுங்கி இருப்பது தான் நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று சிறிது நேரம் நேரத்தை செலவு செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பிரச்சனைகள் இல்லை என்றாலே சந்தோஷம்தான். அமைதியாக இந்த நாள் நகர்ந்து சென்றுவிடும். ஆனால் மனைவியிடம் இருந்து மட்டும் உங்களால் தப்பிக்க முடியாது. வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லாதீங்க. நேர்மையாக நடந்து கொண்டால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் தொழிலிலும் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமாக தான் செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நற்செயல்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்களை எல்லாம் மீண்டும் செய்ய தொடங்கி விடுவீர்கள். மனது நிம்மதி அடையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உங்களை எதிர்த்து பேசிய மேலதிகாரிகள் கூட உங்களைப் பற்றி புரிந்து கொண்டு நல்லபடியாக நடந்து கொள்வார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எதையோ சாதித்தது போல தோன்றும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். இன்று மாலை வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்குது. சுப செலவுகள் உண்டாகும்.

– Advertisement –

Qries
Scroll to Top