இன்றைய ராசிபலன் – 10 மே 2025

இன்றைய ராசிபலன் – 10 மே 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான, நிதானமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த பதட்டமும் இருக்காது. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பெண்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான சூழ்நிலை நிலவும். கடன் சுமையிலிருந்து வெளிவர முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரெஸ்ட் கிடைக்கப் போகிறது. வேலையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, உங்களுக்கு நல்ல ஓய்வை கொடுக்கும். மன நிம்மதியை கொடுக்கும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது‌. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் ஓட்டம் அதிகமாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து உடம்பை ஜாக்கிரதியாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இந்த நாள் இறுதியில் நிச்சயம் கடவுள் உங்களுக்கு மன நிறைவை கொடுப்பான். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். கவலை படாதீங்க. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். நொடிக்கு நொடி பல அதிசயங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை சீராகும் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் ரொம்ப ரொம்ப தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்கக் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அனுபவ சாலைகளினுடைய பேச்சை தட்டிக் கழிக்கக்கூடாது. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. கணவன் மனைவி சண்டை ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.விருச்சிகம்விருச்சிக ராசி காரர்கள் இன்று கொஞ்சம் செலவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு, முன்பு யோசிக்கவும். வீட்டிலிருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். முன் கோபப்படக்கூடாது. பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததை எல்லாம் நல்லபடியாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். அவசர முடிவு வேண்டாம்.மகரம்மகர ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நன்மை நடக்கும்‌. உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். உங்களுடைய பர்சனல் விஷயங்களை வெளி ஆட்களிடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன சின்ன கவலைகள் அவ்வப்போது வந்து போகும். நீண்ட தூர பயணங்களில் சின்ன சின்ன தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் ஓய்வு கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், நஷ்டத்திற்கு வாய்ப்பு இல்லை. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் சுமையை அடைப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். நிம்மதி தானாக வரும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top