இன்றைய ராசிபலன் – 11 ஏப்ரல் 2025

இன்றைய ராசிபலன் – 11 ஏப்ரல் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். எதுவாக இருந்தாலும் பொறுமையாக கையாளுங்கள். அவசரப்பட வேண்டாம். முக்கியமான விஷயங்களை நாளை தள்ளிப் போடுவது நல்லது. முருகனை நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள். பிரச்சனைகள் விரைவில் தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராடி எதிர்நீச்சல் போட்டு வெற்றிவாகை சூடுபீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இன்று வாழ்க்கையில் நன்மை நடந்ததற்கு முருகனுக்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தக்க சமயத்தில் சரியான உதவி கிடைக்கும். என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கும் போது, அந்த முருகப்பெருமான் வாழ்க்கைக்கு உண்டான ஒரு நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பான். புரியா புதிர்களுக்கும் விடை கொடுக்கக்கூடிய நாள் இது. முருகனை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு வாழ்க்கையில் இன்று நல்ல காலம் பிறக்கும். இதுநாள் வரை உங்கள் வாழ்வில் பின்தொடர்ந்த கஷ்டங்கள் விலகும். சோம்பேறித்தனம் விலகும். இந்த நாளில் எதிர்காலத்திற்கு தேவையான முடிவுகளை எடுக்கலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வது புதிய வேலை தேடுவது, இதுபோல விஷயங்களில் கவனம் செலுத்தினால் நன்மை நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். காலையில் இறை வழிபாடு செய்துவிட்டு உங்கள் நாளை சந்தோஷமாக தொடங்கினாலும், இன்று மாலை சில பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. வேலையில் முழு கவனமும் இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியாக நிறைய நன்மைகள் நடக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடவுள் உங்களுக்கு இன்று மன நிறைவான நாளை கொடுக்கப் போகின்றான். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்ல படியாக நடக்கும். கூடுமானவரை அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடவும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கு பிள்ளையார் சுழி போடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சுப காரிய தடைகள் நீங்கும். கெட்டிமேளம் சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் நடந்தவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தினம் தவறாமல் முருகர் வழிபாட்டை செய்யுங்கள். நல்லது நாலா பக்கத்தில் இருந்து உங்களை வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். வேலையில் முழுதாக கவனத்தை செலுத்த முடியாது. இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்படலாம். உடனே துவண்டு போகக்கூடாது. கூடுதல் கவனத்தோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நிறைய வேலை வரிசை கட்டி நின்றாலும், எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் மனதிற்கு திருப்தி கிடைக்கும். தேவையற்ற நண்பர்களின் நட்பு தானாக விலகி செல்லும் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை மனதை இறை வழிபாட்டில் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் ஒருபோதும் அலட்சியம் இருக்கக் கூடாது. நிதானமாக நடந்து கொண்டால் வரக்கூடிய பிரச்சனைகள் தானாக விலகி செல்லும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நன்மைகள் நடக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வேலை சுமை குறையும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top