இன்றைய ராசிபலன் – 11 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 11 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எந்த ஒரு காரியத்தையும் அவசர அவசரமாக செய்யக்கூடாது. உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை. வீட்டில் ஏதாவது சண்டை சச்சரவு இருந்தாலும், கனவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். பிரச்சினையை பெருசாக்க கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் கூட நிதானம் தேவை. எடுத்தவுடன் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். சொந்த ஊர் செல்பவர்களுக்கு சந்தோஷம் பிறக்கும். பொங்கல் கொண்டாட சுறுசுறுப்பாக தயாராகுவீர்கள். வீட்டிற்கு தேவையான சுப பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். நன்றாக பழகிக் கொண்டிருந்தவர்கள் கூட எதிரியாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலையில் யாரும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் அனுசரணையாக செல்ல வேண்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமை கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால், இன்று பிரச்சனை இல்லை. அனாவசியமாக மூன்றாவது நபரின் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக நேரத்துக்கு உங்கள் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். யாரிடமும் வெளிப்படையாக பேச மாட்டீர்கள். ரொம்பவும் பிடித்த நண்பர்கள், வாழ்க்கை துணையை கூட ஒதுக்கி வைப்பீர்கள். மனதில் இருக்கும் கஷ்டங்களை மனதில் போட்டு புதைத்து, மன அழுத்தம் அதிகமாக வாய்ப்புகள் இருக்கிறது. வெளிப்படையாக பேசுங்கள். பிரச்சனையை வெளியே சொன்னால் தான் ஒரு தீர்வு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவுகள் ஏற்படும். கையில் இருக்கும் சேமிப்பு கரைய வாய்ப்புகள் இருக்கிறது. சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் துவங்கும். மனதிற்கு பிடித்தவர்களை கைப்பிடிப்பீர்கள். காதல் திருமணம் வரை செல்லும். பெரியவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எந்த ஒரு புது வேலையை கொடுத்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த ஊர் செல்பவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை பார்த்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொங்கல் கொண்டாட தயாராகி விடுவீர்கள். புத்தாடை வாங்க, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். மனதில் இருந்த அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பம் குழந்தை கணவன் மனைவி என்று இந்த நாள் சந்தோஷமாக நகர்த்தி செய்தீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் நல்ல அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் செல்வதில் சில பல தடைகள் வரும். இருந்தாலும் தடைகளை மீறி உங்களுடைய வேலைகளை சரிவர செய்ய இறைவனின் ஆசிர்வாதம் இருக்குது. துன்பம் வரும்போது துவண்டு போகக்கூடாது. விடாது முயற்சி செய்தால் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி நன்மைகள் வரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை முழுமையாக நம்ப வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று வெற்றி காணலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு உண்டான வழிவகைகளை தேடலாம். நல்லது நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். இதுநாள் வரை இருந்த டென்ஷன் எல்லாம் சரியாகும். வேலையில் பிரஷர் குறையும். பண்டிகையை கொண்டாட எல்லா வேலைகளையும் துவங்கி விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நிதிநிலைமை சீராகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி ஓட்டும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top