இன்றைய ராசிபலன் – 11 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 11 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஆதரவாக மேலதிகாரிகள் பேசுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டுக்கு தேவையான பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எல்லா விஷயத்திற்கும் முன்கோபடுவீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகளை கூட, நீங்களே பேசி பேசி பெரிய பிரச்சினையாக மாற்றி விடுவீர்கள். அதனால் இன்று எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அடம் பிடித்து எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றத்தை அடைவீர்கள். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருந்து வந்த வேலையை சுமுகமாக சரி செய்து விடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். உங்களுக்கான நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் தவறாமல் செய்து விடுவீர்கள். கவலைப்படாதீங்க கடவுள் உங்கள் பக்கம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பிரச்சனை பெருசாகாது. நீங்கள் முன்கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் போதும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீங்க ‌
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலை தேடுவது, புதுசாக பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் முதலீட்டின் போது கவனம் இருக்க வேண்டும். தெரியாத வேலையில் தலையிடக்கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அகலமாக காலை வைக்கக் கூடாது. படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் நிரந்தர சந்தோஷத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். என்றோ செய்த முதலீட்டின் மூலம் இன்று லாபம் அடைவீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் தேவையான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் உறவுகளோடு சின்ன சின்ன முரண்பாடுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கப் போகின்றது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாள் திட்டிக் கொண்டே இருந்த முதலாளி கூட இன்று உங்களை கூப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார். பாராட்டுகளை தெரிவிப்பார். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். அரசாங்க வேலை உங்களுக்கு சாதகமாக முடியும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூக வலைதளங்களில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருங்கள். கண்ணுக்குத் தெரியாத மனிதர்களோடு பேச வேண்டாம் பழக வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். 4 பேர் உங்கள் முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. நண்பர்கள்தானே உறவினர்கள் தானே என்று நம்பி குடும்ப விஷயங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டாம். எதிலும் ஒரு ஒளிவு மறைவு இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தெளிவான மனநிலைமையில் இருப்பீர்கள். நாம் எடுத்த முடிவு சரியா தவறா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்வீர்கள். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பொறுமையாக இருந்தால் தான் சாதிக்க முடியும். எதிலும் அவசரப்பட வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாகலாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்களே உதவி என்று கேட்காமல் இருந்தால் கூட தானாக உதவிகள் கிடைக்கும். கொஞ்சம் ராஜ வாழ்க்கை தான் இன்று. அனுபவித்துக் கொள்ளுங்கள். ஆனால் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதில் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் யோசிக்காதீங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top