இன்றைய ராசிபலன் – 12 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 12 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக செய்யக்கூடிய வேலைகள் சின்ன சின்ன பிரச்சனையில் போய் முடிய வாய்ப்புகள் இருக்கிறது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடித்து நடக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்கள், டீன் ஏஜில் இருப்பவர்கள் இந்த நாள் கவனமாக பொறுமையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது ஏதாவது ஒன்று இன்று நிச்சயம் நடக்கும். அந்த நல்லது உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். பொங்கலுக்கு தயாராகி விடுவீர்கள். உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு இருக்காது. சுப செலவுகள் ஏற்படும். வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பயணங்கள் நல்லபடியாக அமையும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். லாபம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்வீர்கள். பிடித்த வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். குறிப்பாக இன்று பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக தான் இருக்கும். இருந்தாலும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உண்டான ஆதரவு கிடைக்கும். நிறைய பேர் தாங்கவே வந்து உங்களுக்கு வந்து உதவி செய்வார்கள். நண்பர்கள் உறவுகளுடைய அருமை பெருமைகளை இன்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயரும் புகழும் தேடிவரும். வேண்டாம் என்று சொன்னாலும் பட்டமும் பதவியும் உங்களுக்கு கிடைக்கும். வருமானமும் உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வேலை செய்து செய்து சோர்ந்து போவீர்கள். அவ்வளவு வேலை வரிசை கட்டி நிற்கும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு நிமிடத்தை கூட வீணடிக்காமல் இந்த நாளை உபயோகமாக பயன்படுத்திக் கொண்டால், மட்டும்தான் விடுமுறை நாட்களை சந்தோஷமாக அனுபவிக்க முடியும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இருக்கும் வேலையை எப்படியாவது முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதில் உங்களுடைய மனது சுறுசுறுப்பாக செயல்படும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். மற்றபடி எல்லாம் இன்று நல்லபடியாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலையும் வியாபாரமும் நீங்கள் நினைத்ததை விட நல்ல படியாக தான் செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்ப சண்டை சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்‌. நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வீட்டு வேலைகளை எல்லாம் கொஞ்சம் கவனத்தோடு செய்வீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும். அடுத்தவர்களுடைய பிரச்சினையை கூட சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். அடுத்தவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். பொங்கல் செலவை சமாளிக்க ஏதோ ஒரு தொகை கையை வந்து சேரும். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top