இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உறவினர்களோடு போட்டி பொறாமைகள் வரலாம் ஜாக்கிரதையாக இருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். சேமிப்பை உயர்த்துவதில் தான் உங்களுடைய திறமை அடங்கியுள்ளது. நிம்மதியும் அடங்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தொழிலில் விடாப்படியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் எவ்வளவுதான் உழைப்பை முதலீடாக போட்டாலும் வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதற்காக சோர்ந்து போகக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகும் சந்தோஷம் பிறக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் நிறைய இருக்கும். தேவைக்கு அதிகமாகவே கைக்கு பணம் வரும். அதையெல்லாம் பொறுப்பாக எப்படி செலவு செய்வது என்பதை சிந்திக்க வேண்டும். செலவை குறைப்பது நல்லது. மற்றபடி வேலை தொழில் எல்லாமே உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும். வீட்டில் சுப காரிய தடை விலகும். வேலையில் கொஞ்சம் சுமை அதிகமாகத்தான் இருக்கும். கூடுதல் நேரமும் கவனமும் இருந்தால் மட்டுமே அலுவலக பணியை முடிக்க முடியும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அமைதி தேவை. வீண் வாக்குவாதம் செய்யக்கூடாது. தேவை இல்லாத பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்றைய நாள் சுமூகமாக செல்லும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் மன நிறைவான லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வரவு செலவில் சில சிக்கல்கள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சில பேருக்கு வரலாம். வேலை செய்யும் இடத்திலும் கொஞ்சம் பொறுமையாக தான் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். அடம் பிடித்து எந்த விஷயத்தையும் செய்யாதீங்க.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. சொத்து சுகம் சேர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மனைவிக்கு பிடித்த பொருளை பரிசாக வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். அதை சரி செய்ய நீங்கள்தான் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். காலையில் இந்த நாள் சோம்பேறித்தனத்தோடு தொடங்கி இருந்தாலும், நாள் இறுதியில் நீங்கள் நினைத்த வேலையை எல்லாம் சரியாக முடித்து இருப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புது எதிரிகள் உருவாகலாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனுசரித்து செல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்பதில் தெளிவு இருக்காது. இதனால் உடல் சோர்வும் ஏற்படும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கிற வேலையை இருக்கிற தொழிலை தக்க வைத்துக் கொள்வதில் தான் உங்களுடைய புத்திசாலித்தனம் அடங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்பு கரையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். விலை மலிவாக ஏதாவது ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், அதை வாங்கி ஏமாறாதீங்க. ஜாக்கிரதையா இருங்க. வேலை தொழில் சுமூகமாக செல்லும். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்கணும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை தொடங்கி இருப்பீர்கள். மன நிம்மதியோடு இருப்பீர்கள். மனது ஆன்மீகத்தை நாடும். கடன் பிரச்சனை நீங்கும். புதிய உறவுகள் நட்புகள் உங்களுடைய வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வேலை சுமை உங்கள் தலையில் வந்து அமரும். வீட்டில் இருக்கும் பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் ஆண்கள் வரை இன்று பிஸியாக தான் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செல்லுங்கள். அடிக்கடி தண்ணீரை குடித்து ஆரோக்கியத்தை பத்திர படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top