இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். நாலு பேர் பாராட்டும் அளவுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபரிடம் எந்த ஒரு பரிவர்த்தனையும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக வேலை தேடுவது, புதுசாக வீடு குடி போக பார்ப்பது, புது சொத்து சுகம் வாங்குவது, போன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். உங்களுக்கு இன்று எல்லாம் லாபகரமாக அமையும். உங்களுக்கான நல்ல விஷயங்களாகவும் அமையும். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து நல்ல காரியத்தை தொடங்குங்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடப்பதற்கு உண்டான பேச்சு வார்த்தைகள் தொடங்கும். சுப செலவுகள் உண்டாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதலான வேலை பளு இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஒரு வேலையை கடைசி வரை இழுத்துச் செல்ல வேண்டாம். முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கி அந்த வேலையை முடிப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். நேரத்தை வீணடித்தால் இன்று நஷ்டம் உங்களுக்குத்தான்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரும். ஆனால் அந்த சிக்கலை எல்லாம் சாதுரியமாக நீங்க சரி செஞ்சுருவீங்க. அந்த அளவுக்கு திறமையாக உங்களுடைய சிந்தனை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய எதிரிகள் உருவாகலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாரிடம் பேசினாலும் கொஞ்சம் சாந்தமாக பேசுங்கள். தொழிலில் முதலீட்டின் போது அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதிகமாக டென்ஷன் ஆவதால் சில பிரச்சனைகள் ஆரோக்கியத்தில் ஏற்படலாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய முதலீடு செய்வதற்கு உண்டான நிதி உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு நன்மையை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் விளையாட்டு புத்தியை தூர வைத்துவிட்டு பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். நிதிநிலைமை சீராகும். கட்டுக்கடங்காத செலவை கட்டுப்படுத்துவீர்கள். சேமிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவுகளுக்குள் பகை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை வாக்குவாதம் செய்ய வேண்டாம். எந்த பிரச்சினை வந்தாலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவும். முன்பின் தெரியாத விஷயங்களில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய முதலீட்டை செய்யலாம். தொழிலில் எதிரியாக இருந்தவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன சஞ்சலம் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சண்டை போடாதீங்க. அப்படியே சண்டை வந்தாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்கவும். அவசரப்படக்கூடாது முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். விடுமுறை நாள் என்றெல்லாம் பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். இதனால் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். சந்தோஷமும் மனநிறைவும் அடைவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப சோர்வாக இருக்கும். ஆனால் சில வேலைகளை செய்தே ஆக வேண்டும் கட்டாயம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டு உறவுகளோடு சில வாக்குவாதம் வரலாம். வீட்டு வேலையும் இரட்டிப்பாக இருக்கும். யாரிடம் பிரச்சனையை சொல்லுவது என்று தெரியாமல் சில பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த இறைவனை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். மன நிம்மதி தானாக உங்களைத் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் நிலையாக இருக்காது. எந்த ஒரு சந்தோஷமும் நிலையாக இருக்காது. இதனால் உங்களுடைய அன்றாட வேளையில் கவனம் செலுத்துங்கள். மற்றதை எல்லாம் அந்த கடவுள் பார்த்துக் கொள்வான். முன்கோபத்தை குறைக்கணும். எல்லோரிடமும் பணிவாக பேசணும். எல்லோருக்கும் உணர்வு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு மட்டும் தான் பிரச்சனை என்று வாக்குவாதம் செய்யாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். இன்ற மாலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தான் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் எதிலும் அதிக ஆர்வம் இருக்காது. அளவான சாப்பாடு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆரோக்கியம் தராத சாப்பாட்டை தொட்டு கூட பாக்காதீங்க. இன்றைக்கு அது உங்களுக்கு செட்டாகாது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top