இன்றைய ராசிபலன் – 15 ஏப்ரல் 2025

இன்றைய ராசிபலன் – 15 ஏப்ரல் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் யோசனையை அடுத்தவர்களிடம் சொல்லி, அடுத்தவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். புதுசாக தொழில் தொடங்குவது, புது வேலை தொடங்குவது இது போல முயற்சிகள் வெற்றி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் பிறக்கும். ரொம்ப நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையை சுறுசுறுப்பாக கையில் எடுத்து செய்து முடிப்பீர்கள். அரசாங்க வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையின் நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தை நல்லபடியாக நடத்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வியாபாரத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் தடைகள் எல்லாம் இன்று விலகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இன்று செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். மனக்குழப்பும் இருக்கும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். புதுசாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இருக்கும் வேலையை கவனத்தோடு செய்தாலே போதும். பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற பிரச்சனைகளில் நீங்களே சிக்குவீர்கள். யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்காதீங்க. கடன் கொடுக்காதீங்க. குறிப்பாக மேலதிகாரிகளோடு பேசும்போது கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் அமோக வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். உடலுக்கு குளிர்ச்சி திரும் உணவை சாப்பிட்டால் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு முன்கூபம் அதிகம் வரும் நாள் இன்று. நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் கோபத்தால் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஆகவே இன்று பொறுமையாக இருக்க வேண்டும். விஷயம் புரியாமல் வாயை கொடுத்து மாட்டிக்காதீங்க அமைதியாக இருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும். அவசரப்பட்டு எதையாவது பேசி பிரச்சினையில் நீங்களே சிக்கிக் கொள்வீர்கள். பிறகு சிந்திப்பீர்கள் இதை நாம் செய்யாமல் இருந்திருக்கலாமே என்று. ஆகவே ஒரு வேலையை செய்வதற்கு முன்பு இன்று பலமுறை யோசிக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிசியான நாளாக இருக்கும். வேலைகளை செய்வதற்கு நேரம் பத்தாது. உடலில் வசதி உண்டாகும். தேவையற்ற டென்ஷன் தலைவலி வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். ஓய்வு எடுப்பதற்கு நேரம் இருக்காது. மேலதிகாரிகளுடைய ஆதரவால், வேலையில் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். கொஞ்சம் வீண் விரைய செலவுகளும் ஏற்படும். ஆக மொத்தம் பணம் செலவு ஆகும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top