– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். எந்த ஒரு வேலையையும் திறமையாக செய்வீர்கள். மாணவர்கள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் இன்று சாதனை படைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் குடும்பப் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட அடைப்பதற்கு உண்டான வழி அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சின்ன சின்ன தோல்வி இருக்கும். எந்த ஒரு வேலையை நீங்கள் செய்ய தொடங்கினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாலு பேர் இருப்பார்கள். இதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் பக்தவிகள் தானாக தேடிவரும். அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற சஞ்சலம் சில பேருக்கு இருக்கும். வாய்ப்புகளை நழுவ விட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் விடாமுயற்சியானது விஸ்வரூபம் வெற்றியைத் தேடித் தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். ஏமாற்றத்தை கண்டு துவண்டு போகக் கூடாது. அயராது உழைத்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அன்றைக்கான வேலையை, அன்றே முடிக்கவும். பொறுப்புகளை நாளை தள்ளிப் போடாதீர்கள். நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். உங்களை ஊக்குவிப்பதற்காக நண்பர்கள் நிறைய பேசுவார்கள். நண்பர்களில் உதவியும் மூலம் நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். நகை பணம் இவைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். கலைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்வியை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். மனசு சந்தோஷமடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு இருக்கும். நிதி நிலைமை சீராகும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீங்களே உதவி செய்வீர்கள். மனநிறைவும் அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். சோம்பேறித்தனம் விலகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உற்சாகமாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த சிக்கல்களை எல்லாம் சுலபமாக சரி செய்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று முன்எல்லா விஷயத்தையும் செய்துவிட வேண்டும். வேலைக்கு செல்வதாக இருந்தால் 1/2 மணி நேரத்திற்கு முன்பே வீட்டில் இருந்து கிளம்பவும். சின்ன சின்ன விஷயத்தை கூட மறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வாரத் தொடக்கமே கொஞ்சம் டென்ஷனான நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். எதிரியை சண்டை போட்டு போராடுவதற்கு நேரம் சரியாக இருக்கும். உடல் அசதி ஏற்படும். நிறைய தண்ணீர் குடியுங்கள். போட்டி போட சண்டை போட உங்களுடைய ஆரோக்கியத்தை முதலில் கவனித்துக் கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் எல்லாம் உங்களுடைய வெற்றியை நிலை நாட்டுவார்கள். உங்களுக்கும் திறமை உண்டு என்பதை எதிரிகளுக்கு நிரூபிப்பீர்கள். வாழ்க்கையில் லட்சியத்தை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலையில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். சில பேருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் இன்று விலகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மன நிம்மதியை அடைவீர்கள். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க அந்த கடவுள் உதவி செய்வார். எந்த ரூபத்திலாவது பணம் வந்திடும். சந்தோஷமாக இந்த நாளை கலந்து செல்வீர்கள். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam