
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. நிதானமாக பேசினால், நிதானமாக ஒரு முடிவை எடுத்தால், பெருசாக பிரச்சனை இருக்காது. யார் மீது உள்ள கோபத்திலையோ, யார் மீது உள்ள வெறுப்பிலேயோ, எந்த முடிவையும் எடுக்காதீங்க. இறை வழிபாட்டில் மனதை செலுத்துங்கள். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையிலும் நல்ல பிளான் தேவைப்படுகிறது. எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத நபரோடு சென்று சண்டை போட வேண்டாம். புதுசாக ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும் ஆயிரம் முறை யோசிக்கவும். இன்று நிதானத்தோடு சிந்தித்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். எதிர்பார்த்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வீட்டிற்கு சரியான நேரத்திற்கு வந்து நல்ல சாப்பாடு நல்ல தூக்கமும் கிடைக்கும். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. சுப செலவுகள் ஏற்படும். அதேசமயம் இன்று மாலை விரய செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு நல்ல ஒற்றுமை ஏற்படும். இன்ற மாலை குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மோதல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் நல்ல செய்தி, தொலைபேசியின் மூலம் வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லது நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டமும் லாபமாக மாறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிறைய புது மனிதர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி அடைய வேண்டும் தொழிலில் முன்னேற வேண்டும், எப்படியாவது செல்வந்தராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள அயராது ஒழிப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற நல்லதும் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றியும் இந்த நாள் இறுதியில் உங்களுக்கு கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஒரே நாளில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒரே நாளில் கடனை திருப்பி அடைக்க வேண்டும், ஒரே நாளில் கணவன் மனைவி பிரச்சனை சரியாக வேண்டும் என்றால், அது நிச்சயம் நடக்காது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். அகல கால் வைக்காதீங்க. தெரியாத நபரோடு ரொம்பவும் நெருங்கி பழகாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். ஒரு வேலையும் உருப்படியாக நடக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை சமைக்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். என்னடா நாள் இது என்று கொஞ்சம் அலுப்பாகத்தான் தெரியும். இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெருசாக பிரச்சனை இல்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அறிவு இருக்கும். யார் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு செய்த காரியத்திற்கு எல்லாம் பின்விளைவுகளை இன்று சந்திப்பீர்கள். சுய சிந்தனையால் சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லதையே கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வருமானத்தை சேமிக்கவும் நல்ல வழியை தேடி கண்டுபிடித்து விடுவீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் மனைவி, உடன் பிறந்தவர்கள் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களின் மூலம் கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கங்களில் கட்டாயம் கட்டுப்பாடு தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிள்ளையோடு நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை எப்படித்தான் நகர்ந்து சென்றது என்றே தெரியாது. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிமையான நாளாக அமையும். எப்போதும் போல தான் உங்களுக்கு நிதி நிலைமையில் பற்றாக்குறை. அதை சரி செய்ய ஒரு சின்ன ஓட்டம் இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam