இன்றைய ராசிபலன் – 17 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 17 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி, மன நிம்மதி இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு செயலில் மட்டும் ஆர்வம் காட்டுங்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. முதலீடு செய்வதற்கு முன்பு பலமுறை யோசிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகமாக பேசாதீர்கள். அடுத்தவர்களை நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கணக்கு வழக்குகளை தினமும் சரி பார்க்கவும். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். மூன்றாவது நபரை முழுமையாக நம்பாதீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த, சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பண்டிகையை எல்லாம் கொண்டாடி முடித்துவிட்டு, வேலையில் காலை எடுத்து வைக்கும் போது, முழு மன நிறைவோடு அந்த வேலையை செய்ய துவங்குவீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அலைச்சல் இருக்கும். டென்ஷன் கூடும். பல நாள் வேலை ஒன்றாக கையில் தேங்கி நிற்கும். இன்று கொஞ்சம் கடினமான நாளாகத்தான் இருக்கும். இந்த நாளை எப்படியாவது கடந்து சென்று விடுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். வேகத்தை கூட்டிக் கொள்ளுங்கள் வேறு வழி கிடையாது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் அக்கறை காட்டினால் போதும். சுப காரிய பேச்சுக்களை அடுத்த நாள் தள்ளி வைக்கவும். கோபத்தை குறைக்க வேண்டும். அதிகம் பேசக்கூடாது. மூன்றாவது நபரின் பஞ்சாயத்தில் தலையிடக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான பேச்சுக்கள் இடம்பெறும். அதில் உங்களுடைய பெயரும் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனை குறையும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். விடுமுறை நாட்கள் எல்லாம் கழித்து வேலையை நல்லபடியாக துவங்குவீர்கள். சொந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் காலம் வந்துவிட்டது. பயணங்கள் இனிதே அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச் சந்தைகள் நல்ல லாபத்தை கொடுக்கும் கமிஷன் தொழிலும் கல்லாக கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். நேர் வழியில் செல்வீர்கள். குறுக்குப் பாதையில் செல்லக்கூடியவர்களையும், திருத்தி உங்களோடு சேர்த்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கும் அதிகப்படியான நன்மையை சிந்திப்பீர்கள். தான தர்ம காரியத்திலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு இன்று புண்ணியத்தை சேர்க்க கூடிய நாளாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் அதிகரிக்கும். நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் உங்களுடைய முன்கோபத்தால் நழுவ விட்டு விடுவீர்கள். பொறுமையாக இருப்பது தான் நல்லது. இன்று காலை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடம் தியான நிலையில் அமர்ந்து வேலைகளை துவங்குவது நன்மை பயக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களால் செய்து முடிக்க முடியாத காரியத்தை கூட நீங்கள் செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். விவேகத்தோடு செயல்படுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். எதிராளிகள் கூட உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு உங்களுடைய சிந்தனை வெளிப்படும் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். கூடுதல் பொறுப்புகளை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முதலீட்டில் கவனம் செலுத்தவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று காலை முதலே வேலைகள் சுறுசுறுப்பாக துவங்கிவிடும். பண்டிகை, விடுமுறை நாட்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்களே மனதை தேற்றிக்கொண்டு உங்களுடைய வேலையை துவங்கி விடுவீர்கள். வியாபாரத்தையும் நல்லபடியாக துவங்கி விடுவீர்கள். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப பொறுப்புகள் உயரும். வண்டி ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top