இன்றைய ராசிபலன் – 17 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 17 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சனையான விஷயங்களை எல்லாம் சுமூகமாக பேசியே சரி செய்து விடுவீர்கள். தொழிலில் அதிக கவனத்தோடு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு லாபம் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விளக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் கொஞ்சம் அதிகரிக்கும். துணிச்சலாக சில விஷயங்களை பேசி சரி கட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய மனிதர்களின் சந்திப்பு புதிய அனுபவங்களை கொடுக்கும். அயராது உழைத்து தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வங்கி கடன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சிக்கலான விஷயத்தைக் கூட சுலபமாக எதிர்கொள்வீர்கள். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய அணுகுமுறை புத்திசாலித்தனத்தோடு இருக்கும். பணவரவு சீராக இருக்கும். செலவை சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிக்கள் பிடுங்கள் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். தொழிலை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல கொஞ்சம் அயராது உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபரை நம்பாதீங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக வரும். எல்லா விஷயத்தையும் பதட்டத்துடன் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால் மேல் அதிகாரிகள் முன்பு தலைகுனிவு ஏற்படும். சின்ன சின்ன பின்னடைவுகளை கண்டு அஞ்ச வேண்டாம். விடாமுயற்சி செய்தால் நிச்சயம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை நிரூபிப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். நினைத்தபடி லாபத்தை ஈட்ட முடியும். இன்ற மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததை நடத்திக் காட்டக் கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடைமைகளை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக காசு கொடுத்து வாங்காதீங்க. சில இடங்களில் ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் உற்சாகமான நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிக ஈடுபாட்டுடன் நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மணமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்கக் கூடாது. மேலதிகாரிகளிடம் பணிவோடு பேசவும். வாக்குவாதம் செய்ய வேண்டாம். வாழ்க்கை துணையிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்கவும். அடம் பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்கக்கூடாது. பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இரண்டு பேர் வேலையை ஒட்டுமொத்தமாக நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். செலவுக்கு ஏற்ப வருமானம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த குடும்பத்தோடு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் வந்து போகும். பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்காது. பிரச்சனைகளை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் இருக்கும். வேலையில் டார்கெட்டை முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மேலதிகாரிகளிடம் தலைகுனிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைக்கவும். எல்லா விஷயத்திலும் அனுசரித்து சென்றால்தான் நல்லது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top