– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று துணிவுகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தவர்கள் கூட, இன்று பொறுமை இழந்து காணப்படுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவதில் உங்களுடைய முயற்சிகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. இல்லையென்றால் குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போகும். வேலையிலும் கொஞ்சம் பணிவு தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இறைவனின் ஆசிர்வாதமும் பெரியவர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பிரிந்த நட்பு, பிரிந்த நீண்ட நாள் உறவுகளை பார்ப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். வேலையில் பெருசாக பிரச்சினைகள் இருக்காது. அவபோது வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இல்லத் தரிசிகளுக்கு ஓய்வு இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பு நல்ல ஆதாயத்தை கொடுக்கும். மனநிறைவான நாள் இந்த நாள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தாராளமாக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டவும். தொழிலில் கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத நபரை நம்பி உங்கள் பிரச்சனைகளை சொல்லாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். விடுமுறை நாளில் கூட சில பேருக்கு தொலைபேசியின் மூலம் பிரச்சினைகள் வரும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் பார்ட்னரை முழுதசாக நம்பி கண்மூடித்தனமா இருக்காதீங்க.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வெற்றியை அடுத்தவர்கள் பறித்துக் கொள்ள நினைப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். நண்பர்கள் தானே தெரிந்தவன் தானே என்று நம்பி உங்களுடைய முழு பொறுப்பையும் அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். கொஞ்சம் உஷாராக நடந்துகோங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான நாளாக இருக்கும். நிறைய பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கோர்ட் வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகும். உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். இன்னும் ஒரு சில நாட்களில் உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீருவதற்கு உண்டான வழி கிடைத்து விடும். அதற்கு உண்டான முயற்சிகள் இன்று வெற்றியையும் கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரவை விட செலவு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். செலவை கட்டுப்படுத்த முடியாமல் சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் செலவை குறைப்பது தான் ஒரே வழி. வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்கவும். தகாத நண்பர்கள் உறவுகளுடன் விலகி இருப்பதே உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி மிக்க நாளாக இருக்கும். எடுத்த முயற்சியை கைவிட மாட்டீர்கள். விடாப்படியாக போராடி வெற்றி காண்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். கலைஞர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த தாயகம் திரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய தடைகள் விலகும். வேலையில் நல்ல பெயர் எடுக்க கூடுதல் உழைப்பை போட வேண்டும். தொழிலில் பெருசாக பிரச்சனை இல்லை என்றாலும் அன்றாட கணக்கு வழக்கை அன்றே சரி பார்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த, மன நிறைவான நாளாக இருக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வேலையில் கொஞ்சம் பிரஷர் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். டார்கெட்டை முடிக்காதவர்களுக்கு பிரச்சினைகள் வரலாம். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை எடுக்க முடியாது.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam