இன்றைய ராசிபலன் – 18 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 18 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப விஷயங்களில் பொறுமை தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சின்ன சின்ன தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கஷ்டங்களை நினைத்து பெருசாக வருத்தப்படாதீர்கள். முயற்சிகளை கைவிடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு இடமாற்றத்தோடு பிரமோஷன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று அதிக லாபம் பார்ப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். அடுத்தவர்களுடைய தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் பிரச்சனை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தொழிலில் முதலீட்டின் போது கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை பார்ட்னராக சேர்த்துக் கொள்ள வேண்டாம். முன்பின் தெரியாத நபருக்கு கடனில் வியாபாரம் செய்ய வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மன அமைதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். காதல் கை கூடும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவு இருக்கும். தேவையற்ற மன குழப்பம் விலகும். யாராவது வந்து உங்களை திசை திருப்பினால் கூட மனது மாற மாட்டீர்கள். நேர் வழியில் நடந்து கொள்வீர்கள். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற நட்பிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதானமான நாளாக இருக்கும். எந்த ஒரு அவசரமும் இருக்காது. வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயத்தை பகிர வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். எல்லா வேலையிலும் நீங்கள் தான் நம்பர் ஒன். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற சிந்தனைகள் என்றும் மனக்குழப்பத்தை உண்டு செய்யும். நிதானத்தை கைவிடக்கூடாது. குழப்பத்தோடு புதிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். வேலை சம்பந்தமாக இல்லை அல்லது சொந்த விஷயம் சம்பந்தமாக வெளியூர் செல்வீர்கள். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நிறைய நாள் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். ஆரோக்கியம் இல்லாத உணவுப்பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சுப செலவுகள் உண்டாகும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top