இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவாக செய்யக்கூடிய வேலைகளில் பிழைகள் உண்டாகும். இதனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன பொருள் இழப்புகள் ஏற்படும். ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுடைய உடைமைகளை நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பேருந்தில் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன கஷ்டம் இருக்கும். எதிரிகள் உங்களை மனது நோக்கம் படி பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் கூட இன்று எதிரிகள் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனதிற்கு பிடித்தவர்களிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். மற்றபடி வேலை தொழில் எல்லாவற்றிலும் சுமூகமான போக்கை நிலவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற மன கவலைகளை ஒதுக்கி வையுங்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற நண்பர்களோடு சவகாசம் வைத்துக் கொள்ளக் கூடாது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மிதி நிலமை சரியாக இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும். குடும்ப உறுப்பினர்களோடு தேவையில்லாத வாக்குவாதம் வரும். சண்டை சச்சரவுகளால் நிம்மதியை இழப்பீர்கள். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால், நல்லது நடக்கும் பொறுமையை கையாளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் தாமதம் ஏற்படும். ஒரு வேலையை சொன்னால் சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்க மாட்டீர்கள். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு சொன்ன சமயத்திற்கு செல்ல மாட்டீர்கள். அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்லாமல் திட்டு வாங்கவும் வாய்ப்பு இருக்கு. இன்றைய நாளை 1 மணி நேரம் முன்பாகவே தொடங்குங்கள். அப்போதுதான் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கைநிலைய வருமானம் இருக்கும். பர்சில் பணம் தங்கும். மனதிலும் சந்தோஷம் இருக்கும். உங்களால் முடிந்த உதவிகளையும் அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து வாங்குவதற்கு உண்டான யோகமும் இருக்கிறது. மன நிறைவான இந்த நாளில் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். ஒரு வேலையை இரண்டு முறை செய்வீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். தொழிலில் முன்பின் தெரியாதவர்கள் பேச்சை நம்ப கூடாது. உங்களுக்கு அனுபவம் இல்லாத வேலையில் கால் வைக்கக் கூடாது. பொன் பொருள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு செயல்படுவீர்கள். உங்களோடு பேசி அடுத்தவரால் ஜெயிக்கவே முடியாது. குறிப்பாக பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். பாடகர்கள் கலைஞர்களுக்கும் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். மேல்படிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த, வீட்டிற்கு உபயோகமான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் உழைப்புக்கு நல்ல கூலி கிடைக்கும். சந்தோஷமாக இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழிலில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். நண்பர்கள்தானே என்று நம்பி எல்லா விஷயத்தையும் கண்மூடித்தனமாக ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களை திட்டிக் கொண்டே இருந்தவர்கள் கூட உங்களுக்கு சப்போர்ட்டாக பேசுவார்கள். அந்த அளவுக்கு திறமையாக செயல்படுவீர்கள். டார்கெட்டை முடிப்பீர்கள். நிதி நிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top