இன்றைய ராசிபலன் – 19 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 19 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களை ஜெயிப்பதற்கு யாராலும் முடியாது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் சீராக இருக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான வழிகளை மேற்கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று மாலை இறை வழிபாடு செய்வது குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நீண்ட தூர பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளலாம். மன குழப்பம் நீங்கி உற்சாகமடையக்கூடிய நாளாக இருக்கும். இறையருள் உங்களுக்கு கிடைக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். முக்கியமான சில விஷயங்களில் முடிவெடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். ரொம்பவும் அவசிய தேவை என்றால் பெரியவர்களின் ஆலோசனையோடு முடிவை எடுப்பதை தீர்மானம் செய்ய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்கவும். யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அதிகாலை வேலையிலேயே உங்களுடைய வேலை சுறுசுறுப்பாக தொடங்கும். இறைவனின் அருள் பரிபூரணமாக உங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலைமை சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எடுத்த நல்ல பெயர் கூட கெட்ட பெயராக மாறுவதற்கு உடைய வாய் காரணமாக இருக்கக் கூடாது. வார்த்தையில் இன்று மிக மிக அதிக கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடக்கும். வீட்டில் கெட்டி மேலே சத்தம் கேட்கும். குலதெய்வ வழிபாட்டை குடும்பத்தோடு மேற்கொள்வது நன்மையை தரும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கையை வந்து சேரும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களால் முடிந்தால் அடுத்தவர்களுக்கும் பண உதவி செய்வதற்கு தயாராகிக் கொள்வீர்கள். உறவுகளோடு நல்லிணக்கம் உண்டாகும். சில பேருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள் உற்சாகத்தோடு இன்றைய நாளை தொடங்குவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் அசதி ஏற்படும். மேலதிகாரிகளுடைய பிரஷர் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். எதிலும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். வார்த்தைகளில் கடினம் இருக்கக் கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு சந்தோஷத்தை கொடுக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்களில் இருந்து வெளி வருவீர்கள். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். உடல் உபாதைகளை தடுக்க ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்காது. சின்ன சின்ன தடைகளும் தடங்கல்களும் வரும். இதனால் உங்களுடைய இந்த நாள் சுறுசுறுப்பாக செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. பிரச்சனைகள் வந்தாலும் அன்றாட கடமைகளை முடித்து தானே ஆக வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். காலையிலேயே உங்களுடைய வேலைகள் சுறுசுறுப்பாக தொடங்கிவிடும். வாழ்க்கைத் துணையோடு நல்லுறவு மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். நிதி நிலைமை சீராகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும் மனநிறைவு இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top