இன்றைய ராசிபலன் – 19 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 19 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்களிடம் பேசும்போது ஜாக்கிரதையாக பேசுங்கள். யாரையும் எதிர்த்துக் கொள்ளாதீர்கள். வம்பு வழக்குகளுக்கு ஜாமீனுக்கு போய் நிற்காதீர்கள். யாருக்கும் பஞ்சாயத்து செய்யாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்று பிரச்சனை கிடையாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு அப்ளை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன நிறைவான நாள். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சந்தோஷம் நிலைக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். இறைவனின் ஆசிர்வாதம் பெரியவர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூரப்பயணம் நன்மையை தரும். தொழிலில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் வரலாம். முதலீட்டின் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரின் யோசனைக்கு செவி சாய்க்க கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை பார்த்து நிறைய பேர் பொறாமைப்பட்டு உங்களைப் பற்றிய விஷயங்களை மேலதிகாரிகளிடம் போட்டு கொடுப்பார்கள். நீங்கள் நல்லவர்களாக இருந்தாலும் உங்களை கெட்டவர்கள் என்று சித்தரிக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். இன்று அவர்களை நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நிறைய குள்ளநரி வேலை பார்த்தால் தான் என்று உங்களால் பிழைக்க முடியும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். வயது முதிர்ந்தவர்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தொழில் இவற்றில் எல்லாம் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டால் பிரச்சனை இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சின்ன சின்ன வேலை செய்தாலும் அதை கூட இருப்பவர்கள் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இதனால் உங்களுடைய மனது உற்ச்சாகமாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவைப்படும். ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிட வேண்டாம்.‌ நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேலையில் கொஞ்சம் சுமை அதிகமாக இருக்கும். இரண்டு பேர் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்களோடு பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள். குடும்ப விஷயங்கள் எல்லாவற்றையும் உளறி வைக்காதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான நிறைய நல்ல விஷயங்களை யோசிப்பீர்கள். குழந்தைகளுடைய நலனில் வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காட்டுவீர்கள் உங்களுடைய முயற்சி இன்று வீண் போகாது. கடின உழைப்புக்கு உண்டான பலன் நிச்சயமாக கிடைக்கும். சந்தோஷமாக இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த உற்சாகமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு நண்பர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பிரிந்த காதல் ஒன்று சேரும். கல்யாணம் வரை செல்லும். சுப செலவுகளும் ஏற்படும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தொழிலில் பாட்னரை நம்பி எந்த விஷயத்தையும் ஒப்படைக்க கூடாது. எதுவாக இருந்தாலும் உங்களுடைய பங்களிப்பும் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பேசாத மகன் மகள் அல்லது வேறு ஏதாவது சொந்த பந்தங்கள் வந்து உங்களிடம் பேசும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மன நிறைவான நாளாக இருக்கும். வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். மகிழ்ச்சிக்கு இன்று பஞ்சமி இருக்காது வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல சௌகரியமாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பிரிவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு குடும்பத்தை விட்டு நீண்ட தூரத்தில் வேலை செய்ய வேண்டிய வாய்ப்பு அல்லது வெளியூர் வேலை வாய்ப்பு மாற்றம், இதுபோல ஏதாவது பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வேறு வழி கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தபடி உங்களுடைய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப நலனுக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்யக்கூடிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான நாளாக இருக்கும். வெளியூர் பிரயாணம் ஏற்படும். மேலதிகாரிகளுடன் சிக்கல் வரும். இருந்தாலும் எல்லா பிரச்சனையையும் அமைதியாக சமாளிப்பீர்கள். வேலையை தக்கவதித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேகத்தோடு செயல்படாமல், விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணக்கூடிய நாள். இன்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top