– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். காலையில் எழுந்த உடனே சிவபெருமானை வணங்கி விட்டு உங்களுடைய வேலைகளை தொடங்க ஆரம்பிக்கவும். எல்லாம் வெற்றி கரமாக நடந்து முடியும். இன்று மாலை கோவிலுக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு நீங்கும். வேலை தொழில் எல்லாம் நல்ல முன்னேற்றத்தில் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். நீண்ட நாட்களாக நடத்தி முடிக்க முடியாத வேலைகளை இன்று கையில் எடுத்தால் நிச்சயம் முடிக்கலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் சில விஷயங்களை முயற்சி செய்தே இருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களைத் தேடி நல்ல வாய்ப்புகள் வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நழுவ விடாதீர்கள். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உடல் எடையோடு இருப்பவர்கள் உங்களுடைய எடையை குறைப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளவும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் சரியானபடி முடித்துக் கொடுப்பீர்கள். அதேபோல இன்று உங்களுடைய நேர்மை உங்களை காப்பாற்றும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய உங்களின் பேச்சால் இன்று நிறைய நன்மைகள் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று விட்டுக் கொடுக்கக்கூடிய குணம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். உங்களோடு போட்டி போட்டு எதிரிகளாக இருப்பவர்களை கூட மன்னிக்கும் மனப்பக்குவம் இருக்கும். இதனால் மன நிம்மதி பெறுவீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு நல்லது நடக்கக்கூடிய நாள் எது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆசை இருக்கும். எல்லா விஷயத்திலும் பேராசை படுவீர்கள். உங்களுடைய வாழ்க்கை முறைகளை பார்ப்பதற்கு பதிலாக எப்போதுமே அடுத்தவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பீர்கள். இதனால் சின்ன சின்ன இழப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை அடுத்தவர்களை பற்றி புறம் பேசாதீர்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாதீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். முன்பின் தெரியாதவர்களுடைய நட்பு வேண்டாம். குடும்ப விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, கணவன் மனைவி நேரடியாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியம் பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். எதிர்பார்த்தபடி நிதி உதவி கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவீர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நீண்ட நாள் கடன் தொல்லையிலிருந்து வெளிவருவீர்கள். அடமான நகை மீட்பதற்கு உண்டான நேரமும் காலமும் கைகூடி வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வருவீர்கள். உங்களைப் பார்த்து நாலு பேர் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு காலரை தூக்கிவிட்டு நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் வரும். எதிரிகள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு உயர்வு கிடைக்கும். சந்தோஷம்தான். இந்த சந்தோஷத்தில் குலதெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பது சிறப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்வு ராஜ உபச்சாரம் இருக்கும். நீங்கள் வேலைக்கு செல்லும் ஆண்களாக பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களை கவனிக்க இன்று ஒருத்தர் இருப்பார்கள். உதாரணத்திற்கு பெண்கள் அம்மா வீட்டிற்கு செல்லலாம். ஆண்கள் மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கலாம். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் தான். வேலையிலும் தொழிலிலும் எந்த பிரச்சனையும் இருக்காது சுமுகமாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நண்பர்களும் உறவினர்களும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு கை கொடுப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆண் பிள்ளையால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர்களோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும். சமாளிக்க உங்களிடம் திறமை இருக்கிறது. தொழிலில் வரக்கூடிய இடர்பாடுகளில் இருந்து வெளிவர அயராது உழைக்க வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam