இன்றைய ராசிபலன் – 19 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 19 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருந்தவர்கள், வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சியை நெருங்குவீர்கள். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் தலை கனத்தோடு நடக்கக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனை வரும். தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. தைரியத்தை இழக்கக்கூடாது. பொறுமையாக நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு உண்டான நல்லது கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இரட்டிப்பு வேலை பளு இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சங்கடங்கள் வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். நண்பர்கள் கூட உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். மனைவியிடம் எந்த விஷயத்திற்கும் பதில் சொல்ல முடியாது. இன்றைக்கான சங்கடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் எல்லா விஷயத்திற்கும் மௌன விரதம் இருங்கள். இறைவனை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். வீட்டில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விளக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உடல் அசதியோடு காணப்படுவீர்கள். நிறைய நேரம் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இதனால் உங்களுடைய அன்றாட வேலைகள் பாதிக்கப்படும். தொழிலில் கூடுதல் கவனம் இருக்கவும். எதிரிகளோடு எச்சரிக்கையாக பழக வேண்டும். உங்களுடைய சொந்த விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சேமிப்பு கரையக்கூடிய நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்காதீர்கள். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும் பொருட்களை வாங்காதீர்கள். சில இடங்களில் நீங்கள் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அகல கால் வைக்காதீங்க. பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. அடம்பிடித்து எந்த ஒரு விஷயத்தையும் இன்று நீங்கள் சாதிக்க வேண்டாம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியமும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் உங்களால் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும். வாக்கு கொடுப்பீங்க. கொடுத்த வாக்கை சரியான நேரத்தில் காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சஞ்சலங்கள் விலகும். பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான சில நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்வீர்கள். வங்கியில் கணக்கு தொடங்குவது,  போன்ற சேமிப்பு திட்டங்கள் இன்று தொடங்கினால் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். எதிர்காலத்தில் நன்மையையும் செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கடவுள் சில தர்ம சங்கடமான சூழ்நிலையை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. சோதனையை கடந்தால் தான் சாதனை என்ற நிலைமை வரும். ஆனால் கடவுள் உங்களை கைவிடமாட்டான். பிரச்சனையை கடைசி நிமிடம் வரை கொண்டு போய் எதுவுமே இல்லாமல் புஷ்பவனம் போல மாற்றி விடுவான். அதனால் கவலை படாதீங்க. டென்ஷன் ஆகாதீங்க இறைவனின் மீது மட்டும் நம்பிக்கை வையுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சௌகரியம் குறைவாகத்தான் இருக்கும் வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் வரும். உங்கள் தலைமேல் நாலு பேருடைய வேலை விழும். செய்ய முடியாமல் தவிப்பீர்கள். டென்ஷன் அதிகரிக்கும். வீட்டிற்கு தாமதமாக சென்றால் மனைவியிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை, பிள்ளைகள் கேள்வி கேட்பார்கள். இப்படி நான்கு பக்கத்தில் இருந்து அம்பு உங்களை வந்து காயப்படுத்தும். சமாளிக்கக் கூடிய தைரியம் உங்களிடம் இருக்கிறது எதிர்த்துப் போராடினால் வெற்றி தான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். நண்பர்கள் உறவுகளோடு முன்கோபடக்கூடாது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை சமாளிக்க சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையிலும் தள்ளப்படுவார்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இன்று தாய் நாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான முடிவை வாழ்க்கைத் துணையோடு பேசி ஆலோசனை செய்வீர்கள். நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக் கொண்டால் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷம் அடையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் சந்தோஷமாக பேசிப் பழகுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top