– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபர் ஆலோசனைக்கு செவி சாய்க்காதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது மட்டுமே நடக்கும். உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தானாக விலகி விடுவார்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய உறவுகள் புதிய நண்பர்கள் என்று குடும்பம் விரிவடைய இந்த நாள் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு, வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களை மரியாதையாக பேசவும். முன்கோபத்தை குறைக்கவும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு தேவையான கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் இருக்கும். தேவையற்ற சிக்கல்கள் வரும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. இதனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை. தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். அனாவசியமாக அடுத்தவர்களை குறை கூறும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். புதிய எதிரிகள் உருவாகலாம். இருந்தாலும் பொறுமையை கையாளவும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வாரா கடன் வசூல் ஆகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் இன்பமான நாளாக இருக்கும். மனது நிம்மதியாக இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலையில் எதிர்பாராத ப்ரமோஷன் கிடைக்கும். தொழிலில் விட்ட இடத்தை திரும்பவும் பிடிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நலமான நாளாக இருக்கும். எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. எடுத்த முயற்சிகளில் முதல் முறையே வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களுடைய திறமையால் வேலையிலும் நீங்கள் நம்பர் ஒன்னாக இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் இன்று பரிபூரணமாக கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையிலும் அதிக ஆர்வம் இருக்காது. செலவை குறைக்கவும். கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுப்பது நல்லது. கடன் சுமை அதிகமாகி விட்டால் பிறகு பிரச்சனை உங்களுக்குத்தான். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்தால் நல்லது பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கும். மனது நிம்மதியாக இருக்கும். நீண்ட நாள் தொடர்கதையாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam