இன்றைய ராசிபலன் – 20 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 20 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களைப் பார்த்து நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் இருக்கும். நிறைய கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் மட்டும் சண்டையே வரமாட்டேங்குது, உங்களுடைய கணவர் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார், இப்படி அடுத்தவர்கள் கண்களுக்கு நீங்கள் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இன்று, அக்கம் பக்கம் இருப்பவர், நண்பர் உற்றார் உறவினர்களிடம் இன்று கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் கவனக்குறைவோடு செய்யக்கூடாது. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். யாரிடமாவது பணம் பொருள் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். தொட்ட காரியமெல்லாம் வெற்றி அடையும். மனதிற்கு பிடித்த மன வாழ்க்கை அமையும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். எக்கச்சக்க வேலை கொட்டிக் கிடக்கும். எந்த வேலையை முன் செய்வது, எந்த வேலையை பின் செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்பீர்கள். அலைச்சலை சரி கட்ட ஆரோக்கிய உணவை சாப்பிட வேண்டும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தாலும் தவறு கிடையாது. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆதரவை கொடுக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பு இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். தொழிலில் கொஞ்சம் மந்த தன்மை ஏற்படும். எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இருக்காது. நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள் உங்களுடைய வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வேலையில் சில பேருக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். காலையில் கொஞ்சம் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. ஆனால் போகப் போக மதியத்திற்கு மேல் எப்படியாவது இந்த வாரத்துடைய வேலையை முடித்து விட வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். மாலை குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள் மனநிறைவு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தொல்லை கொடுக்கக் கூடிய ஒரு நபர் உங்களுடனே ஒட்டிக் கொள்வார். அவரை வெட்டி விடவும் முடியாமல், கூட வைத்துக் கொள்ளவும் முடியாமல் உங்களுக்கு சில பல கஷ்டங்கள் வரலாம். இந்த கஷ்டம் ஒரு நபரின் மூலமாக அல்ல வேறு எந்த ரூபத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் வரும் பிரச்சனையை சாதுரியமாக சமாளிக்கணும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுசாக துவங்க வேண்டிய வேலைகளை இன்று செய்யலாம். தொட்ட காரியங்கள் எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை ஏற்படும். உறவுகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவி அனுசரித்து சென்றால் சந்தோஷம் நிறைவாக கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவை என்ற பயம் குழப்பத்தை உண்டு பண்ணும். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மூன்றாவது நபரை நம்பாதீங்க குடும்ப விஷயத்தை எல்லாம் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உங்களுடைய வருமானத்தைப் பற்றியோ உங்கள் குடும்பத்தை பற்றியோ பெருமையாகப் தம்பட்டம் பேசாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப்போகிறது. உங்களுடைய திறமையால் நிறைய நல்ல விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டு பெறுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சில பேருக்கு தாய்நாடு திரும்புவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். டென்ஷனில் தலைவலி வரும். செய்த வேலையை திரும்ப திரும்ப செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஒரு முறை முயற்சியில் வெற்றி காண முடியாது. இந்த நாளை கடந்து செல்வதில் சில சிரமங்கள் இருக்கும். கவலைப்படாதீங்க எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. இன்றைய நாளை சகித்துக் கொண்டுதான் நடத்திச் செல்ல வேண்டும். இறை வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top