இன்றைய ராசிபலன் – 20 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 20 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களால் இயன்ற உதவியை முடிந்தவர்களுக்கு செய்வீர்கள். மனநிறைவு அடைவீர்கள். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். கணக்கு வழக்குகளை கவனமாக சரி பாருங்கள். பார்ட்னரையும் சரி, உங்கள் கீழ் வேலை செய்பவர்களையும் சரி, கண்மூடித்தனமாக நம்பாதிங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களுடைய வேலையை நீங்கள் தான் கவனமாக செய்ய வேண்டும். அடுத்தவர்கள் கையில் உங்கள் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கவனத்தோடு செயல்படுவீர்கள். சூழ்ச்சி செய்து உங்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்காது. தொழிலில் உங்களோடு போட்டி போட்டவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. உழைப்புக்கான அத்தனை நல்லதும் இன்று உங்களைத் தேடி வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். நிறைய வேலை கொடுத்தாலும் சூட்சமத்தோடு அதை சீக்கிரமாக முடிக்கக்கூடிய வித்தையை கற்று வைத்துக் கொள்வீர்கள். வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள், நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடுவீர்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பம் இருக்கும். நிறைய விஷயங்களை யோசித்து குழப்பிக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நண்பர்கள் உறவுகளை சந்தேகப்படாதீர்கள். நம்பினால் முழுமையாக நம்புங்கள். நம்பவில்லை என்றால் அவர்களை விட்டு விலகி விடுங்கள். மனசுக்குள் ஏதோ ஒரு குழப்பத்தை வைத்துக் கொண்டே அடுத்தவர்களிடம் பேச வேண்டாம். இது உங்கள் வாழ்க்கையில் சிக்கலை கொடுத்து விடும் ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சரியான கல்லூரி, சரியான பள்ளி கிடைக்காமல் எந்த இடத்தில் படிப்பது, எந்த படிப்பை எடுத்து படிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவை சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளோடு கொஞ்சம் பணிவாக பேச வேண்டும். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ள பார்ப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் கோபப்படக்கூடாது. முன்பின் தெரியாதவர்களை நம்பாதீங்க. தொழிலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மறதி நிறைந்த நாளாக இருக்கும். முக்கியமான வேலையை கூட மறந்து விடுவீர்கள். உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கைபேசியை மறதியாக எங்கேயாவது வைத்து விட்டு வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை. ஒரு மனதோடு வேலை செய்யவும். கவனத்தை சிதறடிக்க கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சொல்ல முடியாத அளவு சந்தோசம் இரட்டிப்பாகும். காதல் கைகூடும், திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் உண்டாகும். தேவையற்ற எதிரிகள் தானாகவே உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். நல்லது தானாக உங்களைத் தேடி வரும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். இடமாற்றம் உயர்வை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியை தரக்கூடிய நாளாக தொழிலில் இருந்து வந்த தடங்கல்கள் தானாக விலகும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யக்கூடாது. குறிப்பாக மாமியார் வீட்டு ஆட்களோடு கவனமாக இருக்கவும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்தால் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நல்ல பெயர் எடுக்க நிறைய முயற்சி செய்வீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்னமோ கெட்ட பெயர் தான். எவ்வளவு தான் நல்லது செய்தாலும் கெட்ட பெயர் கிடைக்கிறது, என்பதற்காக கெட்டது செய்யக்கூடாது. இன்றைக்கு செய்யக்கூடிய நல்லதின் பலன் நாளை உங்களை வந்து சேரும். ஆகவே குறுக்கு வழியில் போகாதீங்க. உங்களுக்கு தீமை நினைப்பவர்களுக்கும், நன்மையே செய்யுங்க. நல்லதே நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top