இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய குணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பொதுப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. மேல் அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். பிரச்சனைகளை வெளிப்படையாக பேச முடியாது.  நிதி நிலைமை சீராக இருக்காது. இன்றைய பிரச்சனைகளிலிருந்து விடுபட குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய கெட்ட அனுபவங்கள் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும். இப்படித்தான் வாழ வேண்டும், இப்படி வாழ கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தொழிலில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சில பேருக்கு எதிர்பாராத ப்ரமோஷன் மூலம் சந்தோஷம் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் லாபம் கை நிறைய கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்வீர்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத குழப்பங்கள் இருக்கும். யாராவது ஒருவர் உங்களுடைய மனசை கலைப்பதற்கு தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். மூன்றாவது நபரின் பேச்சை காதில் வாங்க வேண்டாம். இதனால் மன நிம்மதியை இழப்பீர்கள். இரவு நல்ல தூக்கமும் இருக்காது அன்றாட வேலையில் கவனம் குறையும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் உண்டாகும் முதலீட்டில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கவலையிலிருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் உங்களை துரத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லை நீங்கும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் மனநிறைவு கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை எதிர்த்து போராடக் கூடிய நாளாக இருக்கும். தைரியத்தோடு செயல்படுவீர்கள். துணிச்சல் வெளிப்பட்ட காரணத்தால் புதிய எதிரிகள் கூட உண்டாகுவா வாய்ப்புகள் இருக்கிறது. கோழைத்தனமாக இனி வாழக்கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தன்னடக்கம் இருக்கும். உங்களுக்கு நிறைய பாராட்டுகளும் புகழும் வந்து சேர்ந்தாலும், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பணிவோடு நடந்து கொள்வீர்கள். நல்லது நடக்கக்கூடிய நாள். வாழ்க்கையில் மேன்மையாக உயரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீங்க. எதிர் பாலின நட்பு பிரச்சனையை கொடுக்கும் ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும், இரட்டிப்பு வேலையாக மாறும். அயராது உழைத்தாலும் இந்த நாள் இறுதியில் உங்களுக்கு மன திருப்தி இருக்காது. இதனால் முன்கோபம் வரும். நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். இரவு நல்ல தூக்கமும் இருக்காது. கடவுளின் மீது பாரத்தை போட்டு பொறுமையாக இருந்தால் நல்லது டென்ஷன் ஆக வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். சேமிப்பு கரையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை இருட்டிப்பாகும். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருக்கும். தொழிலாளிகள் பார்ட்னர்கள் எல்லாம் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டாங்க. இதனால் தொழிலில் விரிசல் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் உற்சாகத்தோடு ஈடுபாடு காட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். ப்ரமோஷன் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கடன் சுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிம்மதியற்ற சூழ்நிலையில் இருப்பீர்கள். எதுவும் உங்களுக்கு சாதகமாக அமையாது. டென்ஷன் பிபி ஏறியது மட்டும்தான் மிச்சம். காரணம் உங்களுடைய சோம்பேறித்தனம் இயலாமை. எல்லா பிரச்சனைகளையும் சாதாரண கண்ணோட்டத்தில் பார்ப்பது, இதையெல்லாம் திருத்திக் கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top