– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் முன்கோபத்துடன் துவங்கும். காலை கண்விழிக்கும் போதே சில சிக்கல்கள் வீட்டில் இருப்பவர்களால் வரலாம். எதையும் பெருசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். யார் வாக்குவாதம் செய்தாலும் நீங்கள் பதிலுக்கு பேச வேண்டாம். பொறுமையாக இருந்தால் இன்று நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். பொறுமை மட்டும் தான் இன்று உங்களுக்கு ஆயுதம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு லேசாக தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டீர்கள். எப்படியாவது போராடி முயற்சி செய்து அந்த செயலை வெற்றிகரமாக முடித்து காண்பிப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய இந்த செயல்பாடு பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கும் மருத்துவ செலவும் உண்டாகும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சுமூகமாக இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். இன்றைக்கான வேலை முழுவதையும் சரியான நேரத்திற்குள் முடிக்க முடியாது. மேலதிகாரிகள்ளோடு அனுசரணையோடு பேச வேண்டும். உறவுகளோடு முன்கோபம் வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் செய்யக்கூடாது. இந்த நாளை கொஞ்சம் சிரமத்தோடு தான் நகர்த்திச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். ஒரு பொருள் நம் கையில் இல்லாத போது தான் அதனுடைய அருமை தெரியும் என்று சொல்லுவார்கள். இன்று உங்களுக்கு இந்த பணத்தின் அருமை எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். இன்று வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்தால், பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய குழப்பங்கள் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் மனது அலைபாயும். சின்ன சின்ன வேலைகள் கூட பெரிய பாறாங்கல் போல தெரியும். காரணம் மனதில் இருக்கும் குழப்பம். மனதை முதலில் தெளிவு படுத்துங்கள். பிறகு வேலையை துவங்கலாம், இல்லையென்றால் எல்லா விஷயத்தையும் மூடி வைத்துவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். இல்லை என்றால் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அரைகுறை மனதோடு இன்றைக்கான வேலையை செய்ய வேண்டாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை உற்சாகத்தோடு துவங்குவார்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நல்ல வருமானத்தை ஈட்டி எடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு பரிசுகள் வரும். சில பேருக்கு வாரா கடன் வசூல் ஆகும். நீங்கள் எது வராது என்று நினைத்துக் கொண்டே இருந்தீர்களோ, அந்த பொருள் உங்கள் கையை வந்து சேரும். மனநிறைவும் அடைவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. உங்களிடம் இருக்கும் பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். குறிப்பாக பேருந்தில் பயணம் செய்பவர்கள், ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லாம் கவனத்தோடு இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உடலுக்கு சூடு தரக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் இருக்க வேண்டும். சாப்பாட்டில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். மற்றபடி தொழில் வேலை எல்லாம் சுமூகமாக செல்லும். உறவினர்களோடு கவனமாக பழக வேண்டும். வீட்டிற்கு வரும் உறவுகள் நண்பர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். வரவேண்டிய பணம் சரியான நேரத்திற்கு வந்து சேராது. உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத காரணத்தால் உங்களுக்கு கொஞ்சம் டென்ஷன் இருக்கும். நம்முடைய பணம் நம்முடைய கைக்கு தேவையான போது கிடைக்கவில்லையே என்று இருந்தாலும், பரவாயில்லை கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைப்பது இன்று நன்மையை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பான்மை இருக்கும். உங்களுக்காக அடுத்தவர்கள் செய்யும் தியாகத்தை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் அனுசரணை இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் உடல் உபாதைகள் படிப்படியாக சரியாகும் நல்லது நடக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam