இன்றைய ராசிபலன் – 21 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 21 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது தொழில் தொடங்குவது உண்டான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் பிரச்சனை இல்லாமல் தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருவாய் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். அடமானம் வைத்த நகைகளை மீட்பதற்கு உண்டான வழிகள் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் கையில் எடுத்தால் பாதியிலேயே நிறுத்த மாட்டீங்க. சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பதில் திறமைசாலிகளாக விளங்குவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். உயர் பதவிகள் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்துக்கு தூங்குங்க.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவை குறைக்க வேண்டும். மனதை கட்டுப்பாடோடு வைத்திருந்தால் தான் இன்றைய நாளில் வெற்றி கிடைக்கும். மனதை அலைபாய விடக்கூடாது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப காரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்வீர்கள். வேலை தொழில் எல்லாம் சிறப்பாக நடக்கும் ‌
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. சிலபேர் வேலைக்கு லீவு போட்டுட்டு வீட்டில் ஓய்வு எடுப்பீங்க. எதுவாக இருந்தாலும் சரி, அரைகுறை மனதோடு எந்த வேலையையும் செய்யாதீங்க. கவனக்குறைவோடு செய்யக் கூடிய வேலை பிரச்சனைகளை கொடுக்கும். ஜாக்கிரதை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும்.‌ சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களை நம்பி கொடுத்த வேலை வீண் போகாது. மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்ய உண்டான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்வீர்கள். நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். கல்வியில் மாணவர்கள் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கும் இன்று முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும் பாராட்டு கிடைக்கும். மேலதிகாரிகளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து விடுவார்கள். உங்களுடைய மனதை இன்று றெக்கை கட்டி பறக்க போகிறது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேரும். இட மாற்றம் நற் பலன்களை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆழமாக சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த வேலையை செய்தாலும் அதற்கு முன்பாக யோசனை தான் அதிகமாக இருக்கும். அதிலேயே பாதி நேரம் கழிந்து போகும். யோசிக்காதீங்க உங்களுக்கு நல்லது என்று பட்டதை சரியாக செய்யுங்கள். நல்லது என்று படவில்லை என்றால் அந்த வேலையை தொட்டுக் கூட பார்க்க வேண்டாம். தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டு பிறகு வேலையில் காலை வைக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். உங்களுக்கு செலவுக்கு காசு இருக்குதோ இல்லையோ யாராவது உதவி என்று வந்து கேட்டால் அடுத்தவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுப்பீங்க. இதனால் நீங்கள் தான் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு பாவம் பார்க்கலாம். ஆனால் தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்ற வரிகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் இன்று தப்பிக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவோடு சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளை பார்த்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப வருவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கி செலவு செய்யாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் இருக்கும். வேலையில் பிரச்சனை, மனது சோர்ந்து போகும். உடனடியாக உடலும் சொல்பேச்சு கேட்காது. மேலதிகாரிகளின் பிரஷர் அதிகமாக இருக்கும். எல்லாம் சரியாகும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கடவுளை நம்புங்கள் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நேர்மையாக பேசவும். குறுக்கு வழியில் போகக்கூடாது பொய் சொல்லக்கூடாது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top