இன்றைய ராசிபலன் – 22 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 22 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று கூட பாராமல் ஓய்வு எடுக்காமல் வீட்டு வேலைகளை எல்லாம் மும்மரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்க உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். சண்டை போட்டுக் கொண்டிருந்த உறவுகள் கூட இன்று மீண்டும் வந்து பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். துணிவாக எதிர்த்து நிற்பீர்கள். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பீர்கள். இதனால் புதிய எதிரிகள் உருவாகலாம். ஆனால் நீங்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை உண்டாகும். நல்லது நடக்கும். நீங்கள் இழந்த மதிப்பையும் கவுரத்தையும் மீட்டெடுக்க கூடிய நாளாக அமையும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வாழ்க்கை துணையாகவே இருந்தாலும் அவர்களுக்கு என்று தனி ஆசை இருக்கிறது. அதற்கு நீங்கள் முட்டுக்கட்டை போடாதீர்கள். அடுத்தவர்கள் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுத்தால் இன்று பிரச்சனை இல்லை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நிறைய விஷயங்களை பிளான் செய்து கொண்டு, இந்த நாளை துவங்குவீர்கள். அவரவர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப உங்களுடைய பிளான் இருக்கும். அது நல்லபடியாக நடந்து முடியும். உங்களுடைய வீண் உழைப்பு என்றுமே வீணாக போகாது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பிள்ளைகளது போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் கைகூடி வரும். நிறைய நல்லது நடக்கக்கூடிய நாள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தானாக உங்களைத் தேடி வரும். திறமைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அதிகமான மறதி உங்களுடைய வேலைகளில் பிரச்சனைகளை கொடுத்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பெரிய பெரிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும்போது, அதற்கு தகுந்தது படி உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எனக்கு தெரியாது, இதை நான் செய்ய மாட்டேன் என்று கடமைகளை தட்டி கழிக்காதீர்கள். பொறுப்புகளை கைமாற்றி விடாதீர்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வேகமாக செயல்படுவதை விட, விவேகத்தோடு செயல்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். உங்களோடு இருப்பவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றி விடுவதற்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற சிந்தனையில் இருப்பீர்கள். உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லதை நீங்களே தடுத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்ல மாட்டீர்கள். அந்த பிடிவாத குணம் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல விஷயத்தை நடக்காமல் தடுத்துவிடும். பிடிவாத குணத்தை கைவிட்டால் மட்டும் தான் உங்களால் இன்று ஜெயிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். கோவில் குளங்களுக்கு செல்ல வேண்டிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையில் தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். கவலை படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அச்சம் நிறைந்த நாளாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் ஒரு பயம் இருக்கும். இவர்கள் என்ன சொல்லி விடுவார்களோ, அவர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்று உங்களுடைய, வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பீர்கள். அடுத்தவர்களைப் பார்த்து உங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டாம். உங்கள் மனதிற்கு பிடித்த நல்லது கெட்டதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நிம்மதியை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் தான் எதிரியாக இருக்கும். வரக்கூடிய நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் உங்கள் முன்கோபத்தின் மூலம் நழுவ விட்டு விடுவீர்கள். கடன் வாங்காதீர்கள். தகுதிக்கு மீறி செலவு செய்யாதீர்கள். இதனால் எதிர்காலத்தில் பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்கள் சொல்வதையும் அனுபவசாலிகள் சொல்வதையும் செவி கொடுத்து கேட்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். வீட்டில் வாழ்க்கை துணைக்கு கொஞ்சம் உதவி செய்வீர்கள். நல்ல பெயரையும் வாங்குவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். தொழிலில் சமூகமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top