– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். சுப காரிய தடை விலகும். மனதளவில் மகிழ்ச்சி அடைவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். சகோதர சகோதரி உறவு பலப்படும். கடன் தொல்லை நீங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் உஷாராக செயல்படுவீர்கள். உங்களை ஏமாற்ற முயற்சி எடுத்தால் கூட அது முடியாது. தொழிலில் போட்டியாக இருப்பவர்களை சுலபமாக விழித்து விடுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு திட்டங்களில் சேரலாம். நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றி அடையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது புது வேலைக்கு செல்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். தேவைக்கு ஏற்ப கடன் கிடைக்கும். மாணவர்கள் உற்சாகத்தோடு இன்று செயல்படுவீர்கள். படிப்பு தவிர மற்ற விஷயங்களிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். இன்று காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்தாலும், மாலையில் சுறுசுறுப்பு கூடும். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, இன்று உங்களுடைய வேகம் அதிகரிக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிக பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த நண்பர்கள் உறவுகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. சந்தோஷமாக அவர்களிடம் பேசி நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்திலும் நல்லது நடக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்றைய நாள் மன நிறைவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற எதிரிகள் உருவாகலாம். பகை உணர்வு ஏற்படும். யாராக இருந்தாலும் முன் கோபப்படாதீர்கள். பொறுமையாக பேசுங்கள். குறிப்பாக பள்ளியின் பயிலும் மாணவர்கள், கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தகராறுகள் கைகலப்பு வரை போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த பொருளை யார் மூலமாவது பரிசாக பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். வரக்கூடிய தடைகளை தகர்த்தெறிய அயராது உழைக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தோடு இருப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நிறைய லாபம் கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் சரியாகிவிடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். தெளிவாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். உங்களுடைய உடைமைகளை பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேச வேண்டாம். முன்பின் தெரியாத நட்பு பழக்க வழக்கங்கள் வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமைசாலிகளாக நடந்து கொள்வீர்கள். நிறைய அனுபவ பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். உங்களுடைய பொறுப்புணர்ச்சியை பார்த்து உங்களுக்கான பதவி உயர்வும் கிடைக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் பக்குவமாக செயல்படுவீர்கள். பிரச்சனைகள் எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்பதை சரியாக கண்டுபிடித்து அந்த இடத்தில் களை எடுப்பீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கப் போகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதில் உண்டான தடைகள் விலகும். முதலீடு செய்வதற்கு தேவையான பணம் கிடைக்கும். நிதி நிலைமை உயர்ந்து காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரும். ஒருவருக்கொருவர் வாய் தகறாரு செய்யாதீங்க. விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கண்மூடித்தனமாக முடிவு எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கைத் துணையிடும் ஒரு முறை ஆலோசனை செய்யவும். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடாதீர்கள். ஜாக்கிரதை. குறிப்பாக அடுத்தவர் பணத்தில் விளையாடவே கூடாது பாத்துக்கோங்க.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam