இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை மட்டுமே கண்ணாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்களுடைய நேரம் முழுவதையும் சரியாக உபயோகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியம் இன்று நன்மையை கொடுக்கும். அடுத்தவர்கள் உங்களை பார்க்கும் போது, நீங்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ்வீர்கள். உங்களைப் போல வாழ வேண்டும் என்று இன்று நாலு பேர், உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். சோம்பேறித்தனத்தை விடுவார்கள், நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வருமானத் தடை விலகும். நிதிநிலைமை சீராகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை காத்துக் கொண்டிருக்கிறது. பல நாள் கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். தேவையற்ற நண்பர்கள் உறவுகள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். பிரச்சனைகள் நீங்க கூடிய நாளாக இருக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள் உழைத்த உழைப்புக்கு ஒரு பலன் கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் பிறக்கும். சுறுசுறுப்பு இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்க்காத நல்லது நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அன்றாட வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. இறைவழிபாடு செய்யுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பங்கள் நீங்க கூடிய நாளாக இருக்கும். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது, குழம்பிய விஷயங்களை இன்று ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சிக்கல்கள் இருக்கும் அல்லவா. அந்த சிக்கல்களை சரி செய்ய இன்றைய நாள் உகந்த நாள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். தேவையில்லாத விஷயங்கள் உங்களை விட்டு தானாக விலகி விடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட்டு நேர்வழியில் உங்களுடைய வாழ்க்கையை நடத்த தொடங்கி விடுபீர்கள். பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடிய நாள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படக்கூடிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் சந்தோஷம் வரும். பொன் பொருள் சேர்க்கை வரும். மனநிறைவு இருக்கும். உற்சாகத்தோடு இந்த நாளை நடத்திச் செல்வீர்கள். இன்ப அதிர்ச்சிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். புதிய வியாபாரம் தொடங்க தேவையான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். புது வேலைக்காக அப்ளிகேஷன் போடலாம். உங்களுடைய புதிய தேடல்கள் இன்று வெற்றியைக் கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வீர்கள். ஆனால் அது தவறு. அடுத்தவர்களை போல முன்னேற வேண்டும் என்று நினைப்பதில் தவறு கிடையாது. தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது, அகல கால் வைக்க கூடாது. நிதானமும் பொறுமையும் இன்று தேவை. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளக் கூடாது ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நிம்மதியாக தூங்கி ஓய்வு எடுப்பீர்கள். மனது நிம்மதி பெறும். பிரச்சனைக்கு தீர்வுக்கான வழியும் தெரியும். மனக்குழப்பத்திலிருந்து விடுபடும் போதுதான் ஒரு தெளிவு பிறக்கும். ஆகவே பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இன்று மனதை ஒருநிலைப்படுத்துங்கள். முடிந்தால் சிவன் கோவிலில் அமர்ந்து பத்து நிமிடம் தியானம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இன்று மாலை பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வும் கிடைத்து விடும். உங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் இருப்பார்கள். நல்லது செய்வார்கள். நண்பர்கள் உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top