– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்களை தொடங்கலாம். இன்று இறைவழிபாடு செய்வதில் முழுமையான மன நிறைவு பெறுவீர்கள். முடிந்தால் யாருக்கேனும் இயலாத ஒருவருக்கு இன்று சாப்பாடு வாங்கி கொடுங்கள். பெரிய அளவில் புண்ணியத்தை பெறுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்கள் கையில் நம்பி ஒப்படைக்க கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை விலகும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களால் நிறைய பிரச்சனை வரும். உங்களுடைய வேலையை முழுசாக செய்து முடிக்க முடியாது. நீங்கள் செய்த வேலைக்கு யாரோ ஒருவர் பாராட்டை தட்டி செல்வார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் இன்று சமாளிப்பதற்குள் இந்த நாள் முடிந்துவிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு மன நிம்மதியை கொடுக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேல் அதிகாரிகளுடன் பாராட்டையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக வேலை செய்து சோர்வாக வேண்டாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் புதிய முதலீட்டை செய்யலாம். உங்களை சுற்றி இருந்த பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக சரியாக தொடங்கும். மன நிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். யாரிடமும் அனாவசியமாக பேச மாட்டீங்க. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். இதுவே இன்று உங்களுக்கு நிறைய நல்ல பலன்களை கொடுக்கும். உங்களுடைய அமைதி, இந்த நாளை அமைதியாக நகர்த்திச் செல்லும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க முடியாது. உற்சாகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உடல் சோர்வு இருக்கும். எதிர்மறை ஆற்றல் உங்களை இன்று சரியாக வேலை செய்ய விடாது. முதலில் நேர்மறை ஆற்றலை கொண்டு வர இறை நாமத்தை சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். சொன்ன வேலையை சரியான நேரத்தில் முடித்து தர முடியாது. இன்றைய நாளை ஒரு மணி நேரம் முன்கூட்டியே துவங்குங்கள். இல்லையென்றால் பஸ்ஸை மிஸ் பண்ணுவீங்க. முக்கியமான மீட்டிங் மிஸ் பண்ணுவீங்க. இதுபோல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். எதிர்பாராத நட்பு உறவு, உங்களை சந்திக்கும்போது மன மகிழ்ச்சி உண்டாகும். காதல் திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லவும். முன் கோபத்தை குறைக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தேவையில்லாமல் டென்ஷன் ஆகிக்கொண்டே இருப்பீர்கள். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மூட் அவுட் ஆகும். குடும்பத்தில் சிக்கல்கள் வரும். கணவன் மனைவி வாக்குவாதம் வரும். மேனேஜர் உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்க கூட மாட்டார். இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க இன்று நீங்கள் திறமையாக செயல்பட வேண்டும். கோபப்படக்கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான நாளாக இருக்கும். அடுத்தவர்கள் வேலையையும் சேர்த்து நீங்களே செய்வீர்கள். தீர்க்க முடியாத சிக்கலைக் கூட நொடி பொழுதில் தீர்த்து வைப்பீர்கள். திறமைசாலி என்ற பட்டமும் உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தையோடு நேரத்தை அதிக நேரம் செலவு செய்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேர் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam