– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சந்தோஷங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொண்டாடுவீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். விடுமுறை நாள் என்பதால் இன்று முழுவதும் உறவினர்களோடும், பிள்ளைகளோடும் நேரத்தை செலவழிப்பீர்கள். எந்த பிரச்சனையும் பெருசாக இருக்காது. தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். முதலீட்டில் கவனம் செலுத்தவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அக்கரையாக இருக்கணும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் தேவையற்ற பஞ்சாயத்துகள் வரும். இருந்தாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தாய் மாமன் உறவோடு பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். பிள்ளைகளை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சேர்க்கை இதையெல்லாம் பெற்றவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். கடன் தொல்லை தீரும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் தொலைபேசியின் மூலம் வரலாம். கவனமாக பேசவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதல் வீட்டை செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய நல்ல குணத்தை அடுத்தவர்கள் புரிந்து கொள்வார்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் நாள் இது. வீட்டில் இருக்கும் உறவுகளோடு ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி மாமியார் மருமகள் பிரச்சனை தீரும். புரிதல் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் பம்பரமாக வேலை செய்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். மணக்க மணக்க சாப்பாடு நல்ல தூக்கமும் கிடைக்கும். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்ற நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் செலவுகள் தான் அதிகமாகும். பார்த்துக்கோங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையை தொட்டாலும் இரட்டிப்பு வேலையாக மாறும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தொழிலிலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். சின்ன சின்ன எதிரிகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. போட்டி பொறாமைகளில் பிரச்சனைகள் வரும். உங்களுடைய லாப நஷ்ட வழக்கு கணக்குகளை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தன்னடக்கம் வாய் அடக்கம் இரண்டுமே என்று உங்களை பாதுகாக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களை தூண்டினாலும், நீங்களே உங்களுடைய மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். மௌன விரதம் இருங்கள். அப்பதான் இன்றைக்கான பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் கொஞ்சம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுங்கள். இல்லை என்றால் உங்கள் வேலையை கெடுப்பதற்கு யாராவது ஒருவர் நிச்சயம் வருவாங்க. மொக்கை போடுவாங்க. ஞாயிற்றுக்கிழமை வேலை பின் தங்கி விட்டால், திங்கட்கிழமை சரியாக வேலை பார்க்க முடியாது ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். இதுநாள் வரை நண்பர்கள் வேடத்தில் திரிந்த எதிரிகளை எல்லாம் கண்டுபிடித்து விடுவீர்கள். யாரிடம் நெருங்கி பழக வேண்டும், யாரிடம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையைச் செய்யும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். ஆனால் உங்களுக்கு, கை கொடுக்க உறவினர்களும் நண்பர்களும் இருப்பார்கள். பிரச்சனைகள் வரும்போது அதை பார்த்து பயப்படக்கூடாது. அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொண்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான வழியை தேட வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு இன்று உங்களுக்கு கை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய தொழில் தொடங்குவது, புது வேலைக்கு முயற்சிகள் செய்வது, போன்ற வேலைகளை பாருங்க. மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்கவும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை சொந்தத் தொழிலில் எந்த ஒரு முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. சேமிப்பை உயர்த்துவதற்கான வழியை மட்டும் பாருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மன நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். நிதிநிலைமை சீராகும். மேனேஜர் தொல்லை இருக்காது. அதுவே பாதி பாரம் குறைந்தது போல இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளோடு கவனமாக பழகி பேசுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளை கவனித்து தான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam